ஊற வைக்கவோ, கை வலிக்க தேய்க்கவோ வேண்டாம்; 10 நிமிடத்தில் பாத்ரூமை பளிச்சென மாற்ற இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!
உங்கள் பாத்ரூமை இயற்கையான முறையில், கெமிக்கல் அதிகம் சேர்க்காமல் சுத்தம்செய்ய எளிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம். இது ஹார்பிக் போன்ற கடுமையான ரசாயனங்களை விட பாதுகாப்பானது மற்றும் கைகளில் அரிப்பு ஏற்படுத்தாது.

Advertisment
தேவையான பொருட்கள்:
உப்பு - 3 ஸ்பூன் (உப்புத் தூள் அல்ல, பெரிய உப்புக்கற்கள்), ஆப்ப சோடா (பேக்கிங் சோடா அல்ல) - 1 ஸ்பூன், சோப்புத் தூள் (சாதாரணமாக துணி துவைக்கப் பயன்படுத்தும்) - 1 ஸ்பூன், ப்ளீச்சிங் பவுடர் - 2 ஸ்பூன், தண்ணீர் - சிறிதளவு
தயாரிக்கும் முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் உப்பு, ஆப்ப சோடா, சோப்புத் தூள் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் அனைத்தையும் சேர்க்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இது கெட்டியான திரவமாக இருக்க வேண்டும். ஒரு பழைய துணி துவைக்கும் பிரஷ்ஷை எடுத்து, அதன் மேல் தேங்காய் நாரை வைத்து ரப்பர் பேண்ட் போட்டு கெட்டியாகக் கட்டவும். தேங்காய் நாருக்கு கிருமிகளை அழிக்கும் இயற்கையான சக்தி உள்ளது. தயார் செய்த திரவத்தில் தேங்காய் நார் பிரஷ்ஷை முக்கி, டைல்ஸ் மற்றும் தரையில் உள்ள உப்பு கறை, மஞ்சள் கறை படிந்த இடங்களில் மெதுவாகத் தேய்க்கவும். பெயிண்ட் பிரஷ் இருந்தால் அதனாலும் அப்ளை செய்யலாம்.
ஹார்பிக் போல இதை ஊறவைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பகுதியில் தேய்த்து முடிக்கும்போதே, ஏற்கனவே தேய்த்த பகுதி காய்ந்துவிடும். காய்ந்ததும், அந்த அழுக்குகள் தானாகவே நீங்கிவிடும். டைல்ஸின் ஓரங்கள் மற்றும் கார்னர் பகுதிகளை சுத்தம் செய்ய டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்தவும். முழு பாத்ரூமையும் சுத்தம் செய்த பிறகு, தண்ணீர் ஊற்றி கழுவவும். உப்பு கறைகள் மற்றும் அழுக்குகள் நீங்கி பாத்ரூம் பளிச்சென்று மாறிவிடும்.
கம்பி பிரஷ் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது டைல்ஸில் கீறல்களை ஏற்படுத்தி, அதன் டிசைன்களை மங்கச் செய்துவிடும். பாத்ரூமை சுத்தம் செய்த பிறகு, உடனடியாக தலைக்குக் குளிப்பது நல்லது. சுத்தம் செய்த பிறகு வீட்டுக்குள் சென்று மற்ற வேலைகளைச் செய்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் பாத்ரூம் அதிக கிருமிகள் நிறைந்த இடமாகும். இந்த முறையால் பாத்ரூம் கிளீனிங் வேலை 10 நிமிடங்களிலேயே முடிந்துவிடும்.