மூன்றாவது முறையாக மல்லம்பாளையம் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். டிஜிட்டல் மீட்டர், ட்ரோன் கேமிரா வாயிலாக அதிகாரிகள் ஆற்றில் இறங்கி சோதனை நடத்தினர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நன்னியூர், மல்லம்பாளையம் ஆகிய இரு இடங்களில் காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் இயங்கி வந்தது. ஆனால் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு, லாரிகள் செல்ல வழித்தடம் இல்லாததால், நன்னியூர் குவாரி மூடப்பட்டது. ஆனால் மல்லம்பாளையம் குவாரி மட்டும் இயங்கியது.
கடந்த செப்டம்பர் 12ம் தேதி அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம் மற்றும் குவாரிகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மல்லம்பாளையம் குவாரியில், சோதனை நடத்தப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி மல்லம்பாளையம் குவாரி, நன்னியூர் குவாரிகளில், 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். மீண்டும் கடந்த 18ம் தேதி குவாரி செயல்பட்ட காவிரியாற்று பகுதிகள், வரப்பாளையத்தில் உள்ள அரசு மணல் கிடங்கு ஆகிய இடங்களில், 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் முன்றாவது முறையாக நேற்று காலை 11.30 மணிக்கு மல்லம்பாளையம் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மணல் எடுக்கப்பட்ட அளவு குறித்து, டிஜிட்டல் மீட்டர், ட்ரோன் கேமரா வாயிலாக, அதிகாரிகள் ஆற்றில் இறங்கி சோதனை செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“