கல்விக்கடன் வாங்க போகிறீர்களா?... இந்த 5 விஷயங்களை மறந்துறாதீங்க
Educational loan : கடன் தருபவரால் கருத்தில் கொள்ளக்கூடிய விஷயங்களான உங்களுடைய பழைய கடன்கள், வருமானம், வயது மற்றும் கிரேடிட் ஸ்கோர் ஆகியவை மிக அடிப்படையான தகுதிகளாகும்.
Educational loan : கடன் தருபவரால் கருத்தில் கொள்ளக்கூடிய விஷயங்களான உங்களுடைய பழைய கடன்கள், வருமானம், வயது மற்றும் கிரேடிட் ஸ்கோர் ஆகியவை மிக அடிப்படையான தகுதிகளாகும்.
உயர் கல்வியாகட்டும் அல்லது இடைநிலை பள்ளிக் கல்வியகட்டும், கல்விக்கான கட்டணம் என்பது கடந்த ஐந்து வருடங்களில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் கல்விக் கடன் பெற்று தான் கல்விக்கான செலவை சமாளிக்கின்றனர். எனினும் மற்ற அனைத்து வகையான கடன்களைப் போல கல்விக் கடன் வாங்கும் முன்னரும் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வது நல்லது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தற்போது பல வங்கிகளும் பல்வேறு நிதி நிறுவனங்களும் கல்விக் கடன் வழங்குகின்றன. ஒரு மாணவருடைய கல்லூரி அல்லது பல்கலைகழக உயர்கல்வி (அது இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ), செலவுக்கு நிதியளிக்க கல்வி கடனே சிறந்த வழி என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Advertisment
Advertisements
அடிப்படைத் தகுதி (Eligibility Criteria)
முதலில் நீங்கள் அந்த கடனுக்கான அடிப்படைத் தகுதிகளை பூர்த்தி செய்கிறீர்களா என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக கடன் தருபவரால் கருத்தில் கொள்ளக்கூடிய விஷயங்களான உங்களுடைய பழைய கடன்கள், வருமானம், வயது மற்றும் கிரேடிட் ஸ்கோர் ஆகியவை மிக அடிப்படையான தகுதிகளாகும்.
பாதுகாப்பானதா இல்லை பாதுகாப்பற்றதா (Secured or unsecured)
நீங்கள் கல்விக் கடன் வாங்க முடிவுசெய்த பிறகு எந்த வகையான கடன் வாங்கப் போகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பாதுகாப்பானதா அல்லது பாதுகாப்பற்றதா என்பதை. நீங்கள் பாதுகாப்பான கல்வி கடன் வாங்கப் போகிறீர்கள் என்றால் கடன் தொகைக்கு ஈடாக உங்களுடைய வீடு அல்லது வேறு சொத்து போன்றவற்றை வழங்க வேண்டும். ஆனால் பாதுகாப்பற்ற கல்வி கடனுக்கு எந்தவித ஈடும் தேவை இல்லை.
வட்டி விகிதம் (Interest rate)
வெவ்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் கல்வி கடன்களுக்கு எத்தனை சதவிகிதம் வட்டி வசூலிக்கின்றனர் என்பதை முதலில் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள். கல்வி கடனுக்கான வட்டிவிகிதங்கள் கடன் வழங்குபவர்களுக்கு இடையில் கணிசமாக வேறுபடும்.
கடன் காலம் (Loan Tenure)
பொதுவாக பாதுகாப்பற்ற கல்விகடன்களுக்கு இந்தியாவில் உள்ள வங்கிகள் 8 வருடங்களும் பாதுகாப்பான கல்வி கடன்களுக்கு 10 வருடங்கள் வரையும் திருப்பி அடைப்பதர்கான கால அவகாசம் வழங்குகிறார்கள்.
எல்லை பணம் (Margin Money)
ஒரு கல்வி பாடத்துக்கான கட்டணம் ரூபாய் 20 லட்சம் என்றால் கல்விகடன் தரும் வங்கிகள், கடன் கேட்பவர் வங்கியின் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்தாலும், ரூபாய் 16 லட்சம் மட்டும் தான் தருவார்கள். மிச்ச தொகையை கடன் பெறும் மாணவர் தான் கட்ட வேண்டும். எனவே கடன் வாங்கு முன்னர் மொத்த கடன் தொகை எவ்வுளவு என்பதை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.