திரைப்பட நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து உள்ளது. வருடக்கணக்கில் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சினிமா நடிகைகளை விட தினமும் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம்தோன்றி நடிக்கும் சீரியல் நடிகைகள் எளிதில் மனதில் பதிந்துவிடுகிறார்கள். மேலும், சமூக வலைதளங்களில் அவர்களது ஃபேன்ஸ்களே தனி பக்கங்களை உருவாக்கி அவர்களை பற்றிய வீடியோக்களை கிரியேட் செய்து பதிவிட்டு ட்ரெண்ட் ஆக்கிவிடுகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் மலராக நடிக்கும் பவித்ரா ஜனனிக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.பவித்ரா ஜனனி சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.ஆல்பா காலேஜில் பிஎஸ்சி டிகிரியும் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏவும் முடித்துள்ளார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதன் மூலம் சில மாதங்களுக்கு பிறகு ஆபிஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பிறகு கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என தொடர்ந்து வாய்ப்பு கிடைத்த அத்தனை சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வந்துள்ளார். வாழ்க்கையில் எது வந்தாலும் அதை சந்தித்துக்கொள்ளலாம் என எப்போதும் பாஸிட்டிவ் வாக யோசிப்பவர் பவித்ரா. சிறிய வேடமாக இருந்தாலும் தனக்கு தரப்படும் கேரக்டேரில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வந்துள்ளார்.

அதன்பிறகு அவருக்கு சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதில் துளசி கேரக்டரில் அவர் நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்தது. பிறகு ராஜா ராணி சீரியலில் நெகடிவ் ரோலில் நடிக்க வந்த வாய்ப்பையும் விடாமல் ஏற்றுக்கொண்டு அதிலும் தனது திறமையை காட்டியுள்ளார்.பவித்ராவிற்கு நெகடிவ் ரோலில் நடிப்பது ரொம்ப பிடித்த ஒன்று.அந்த தொடரில் திவ்யாவாக அவர் நடித்திருந்தது கச்சிதமாக பொருந்தியது. ராஜா ராணி சீரியலில் இவருடைய நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.
சில மாதங்களுக்கு பிறகு அவருக்கு ஈரமான ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. உடனே ஓகே சொல்லி நடிக்கத்தொடங்கினார்.இந்த சீரியலில் இருதயம் என்பவர் இவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.துணை நடிகையாக நடித்து வந்தவர் கதாநாயகியாக நடிக்க முடியுமா என்றெல்லாம் பலர் பேசினர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாதது நடிப்பில் கவனம் செலுத்தினேன் என ஒரு பேட்டியில் பவித்ரா பகிர்ந்துள்ளார். அந்த தொடரின் ஆரம்பத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பையும் காதல் ரொமான்ஸ்யும் பார்த்து பல பேர் இவருக்கு அடிமையாக மாறினர். அந்த வரவேற்பு அனைத்தும் அவரது நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்றே கூறலாம். தற்போது இவரை தவிர வேறு யாராலும் இந்த ரோலில் நடிக்க முடியாது என்னும் நிலையில் நடித்து சின்னத்திரையை கலக்கி வருகிறார்.விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே சீரியல் இரண்டு ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு மலரின் சிறப்பான நடிப்பு முக்கிய காரணமாகும்.

சீரியல்களில் கதாநாயகியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் மோகம் எல்லா நடிகைகளையும் ஆட்கொண்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.அந்த வகையில் சமூக வலைதளங்களில் நாள்தோறும் போட்டாக்களை அப்லோடு செய்வது, டப்மேஷ் வீடியோக்கள், ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வீடியோக்கள் பதிவிடுவது என ஆக்டிவாக இருக்கிறார் பவித்ரா.அவருக்கு புதுபுது ஆடைகள் உடுத்தி இணையத்தில் பதிவிடுவது ரொம்ப பிடித்தமான ஒன்று. அதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தன்னுடைய பேன்ஸ்களை கலங்கடித்து வருகிறார். மாடல் உடைகள் முதல் பட்டுப்புடைவைகள் வரை அவருக்கு பொருத்தமான அத்தனை காஸ்டியூமிலும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா சான்ஸ் கிடைத்தாலும் உடனே ஓகே சொல்லும் ஐடியாவில் இருக்கிறார் பவித்ரா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”