Eeramana Rojave Pavithra Janani : சினிமா நடிகைகள் அதிகபட்சம் வருடத்திற்கு 5 படங்களில் நடிப்பார்கள். ஆனால் சீரியல் நடிகைகளோ வாரத்தில் 6 நாட்கள், தொலைக்காட்சியில் தோன்றி, தங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்கிறார்கள். அதோடு இணையத்தில் ஃபோட்டோவை மட்டும் உலவ விடாமல், ஷூட்டிங் ஸ்பாட்டின் ஃபன்னி வீடியோ, டிக் டாக் வீடியோ உள்ளிட்டவைகளை வெளியிடுவது, லைவில் பேசுவது என ரசிகர்களை எப்போதும் என்கேஜ்டாக வைத்திருக்கிறார்கள் அதனாலோ என்னவோ சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கும் ஃபேன்ஸ் இருக்கிறார்கள்.
என்ன ஒரு அறிவு? அதனால் தான் கேரளா டாப்…
அந்த வகையில், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’ஈரமான ரோஜாவே’ மலருக்கும் ரசிகர்கள் ஏராளம். இவரது நிஜப்பெயர் பவித்ரா ஜனனி. சென்னையில் பிறந்து வளர்ந்த பவித்ரா, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானார். அதோடு, ‘கல்யாணம் முதல் காதல் வரை’, ‘பகல் நிலவு’, ’மெல்லத் திறந்தது கதவு’, ‘லட்சுமி வந்தாச்சு’ போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது ’ஈரமான ரோஜாவே’ சீரியலில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சுய தனிமைப்படுத்தல் : சுவாரஸ்யமான வீடியோ கேம் விளையாட்டுகள்!
சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த பவித்ராவுக்கு, சீரியலில் முழுநீள பெண் கதாபாத்திரம் கிடைத்ததற்கு, அவரின் விடா முயற்சியும், திறமையும் தான் காரணம். சிறு வயதிலிருந்தே டான்ஸ் ஆடுவது, நடித்துக் காட்டுவது, காமெடி செய்வது, பாட்டு பாடுவது என சுட்டிப் பெண்ணாக இருந்திருக்கிறார் பவித்ரா. விக்ரம் படங்கள் ஒன்று விடாமல் பார்க்கும் இவர், அவரை திரையில் பார்த்து நடிப்பில் நிறைய கற்றுக் கொண்டாராம். உணவு என்றால் அது சிக்கன் பிரியாணி தானாம்.
விதவிதமான உடைகளில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிறைப்பதும், லாங் ட்ரைவ் போவதும் பவித்ராவுக்கு பிடித்தமானவைகளாம்.
Vijay TV Serial: பெரிய அத்தை... சின்ன அத்தை... மாமா எந்த ரூமில்?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”