நம்மில் பெரும்பாலோருக்கு, தோல் பராமரிப்பு என்பது நமது வாழ்க்கை முறையின் மிக முக்கியமான பகுதியாகும். தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து நமது சருமம் நன்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக விலையுயர்ந்த கிரீம்கள், சலூன் அதிக பணத்தை செலவிடுகிறோம்.
எவ்வாறாயினும், நமது சருமம் பாதிக்கப்படாமல், ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருப்பதை உறுதிசெய்ய, வீட்டிலேயே நீங்களே சொந்தமாகக் கூடிய சில எளிதான அழகுக் குறிப்புகள் உள்ளன. அதில் ஒன்று தான் பால் பவுடர்.
உங்கள் சருமத்தை இயற்கையாகவே அழகாகவும் பொலிவாகவும் மாற்ற பால் பவுடரில் நீங்கள் செய்யக்கூடிய சில ஃபேஸ் மாஸ்க் இங்கே உள்ளன.
பால் பவுடர், கடலை மாவு மற்றும் ஆரஞ்சு மாஸ்க்
இந்த மூன்று பொருட்களும் சேர்ந்து, உங்கள் சருமத்தை எக்ஸ்ஃபாலியேட் செய்து, டானை நீக்கி, இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது சருமத்துக்கு மிகவும் நல்லது.
இந்த ஃபேஸ் பேக்கைத் தயாரிக்க, உங்களுக்கு தலா ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஆரஞ்சு சாறு மற்றும் கடலை மாவு தேவைப்படும். மூன்றையும் கலந்து ஒரு திக் பேஸ்ட்டை உருவாக்கி, அதை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் சமமாக தடவவும். 15 நிமிடம் அப்படியே வைத்து உலர விடவும். அதன் பிறகு, குளிர்ந்த நீரில் கழுவவும்.
நீங்கள் உடனடியாக வித்தியாசத்தைக் காண்பீர்கள். இருப்பினும், முதலில் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.
பால் பவுடர், தயிர் மற்றும் எலுமிச்சை
சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றினால், இந்த மூன்று கிச்சன் பொருட்களையும் உள்ளடக்கிய ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தவும். இவை ஒன்றாக சேர்ந்து, பிக்மென்டேஷன் மற்றும் புள்ளிகளை அகற்றி, சருமத்தின் இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்கும்.
இதற்கு, இரண்டு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்யவும். இதை முகத்தில் 20 நிமிடங்கள் விட்டு, தண்ணீரில் கழுவவும்.
பால் பவுடர் மற்றும் முல்தானி மட்டி
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் கண்டிப்பாக இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும். முல்தானி மட்டி சருமத்திற்கு சிறந்தது என்று அறியப்படுகிறது, அதனால்தான் சரியான பேஸ்ட்டை உருவாக்க பால் பவுடருடன் அதை இணைக்க வேண்டும்.
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கும், குறிப்பாக முகப்பருவுக்கு ஆளானவர்களுக்கும் இது உதவுகிறது. இரண்டையும் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை நீக்கவும். சில நாட்களில் நீங்கள் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தைக் காண்பீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“