2 டீஸ்பூன் வெந்தயம் இரவில் ஊற வைத்து... தலை முடிக்கு சிம்பிள் ட்ரீட்மென்ட் இதுதான்!
வெந்தயம் முடியின் பளபளப்பையும், துள்ளுதலையும் மீட்டெடுக்க உதவுகிறது. முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு, மிகவும் பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகளில் இதுவும் ஒன்று.
வெந்தயம் முடியின் பளபளப்பையும், துள்ளுதலையும் மீட்டெடுக்க உதவுகிறது. முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு, மிகவும் பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகளில் இதுவும் ஒன்று.
இன்றைய காலகட்டத்தில் பெண்களின் ப்ராக்கள் சந்தைகளில் நிரம்பி வழிகின்றன. புதுபுது மாடல்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.
செரிமானத்திற்கு உதவுவது முதல் முடி உதிர்வைக் குறைப்பது வரை வெந்தயம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. வெந்தயத்தில், ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் ஏ, கே, சி நிறைந்துள்ளது, மேலும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களின் களஞ்சியமாக உள்ளது.
Advertisment
வெந்தயத்தில் அதிக புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் உள்ளது, இது முடி உதிர்தல் மற்றும் பொடுகுக்கு எதிராகவும், முடி வறட்சி, வழுக்கை போன்ற பல்வேறு உச்சந்தலை பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் அறியப்படுகிறது.
இதில் அதிக அளவு லெசித்தின் உள்ளது, இது முடியை ஈரப்பதமாக்குகிறது மற்றும் மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது. வெந்தயம் முடியின் பளபளப்பையும், துள்ளுதலையும் மீட்டெடுக்க உதவுகிறது.
வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது?
Advertisment
Advertisements
ஆயுர்வேதத்தின் படி, வெந்தயம் 'சூடான உணவு' வகையின் கீழ் வருகிறது. வெந்தயத்தின் நன்மைகளை அதிகரிக்க, அவை வழக்கமாக ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கப்படுகின்றன, அல்லது வெப்பத்தைக் குறைக்க முளைகளாக உண்ணப்படுகின்றன. அவை ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டிருக்கிறது, மேலும் அவை நச்சுத்தன்மை நீக்க ஒரு சிறந்த தீர்வாகும்.
முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு, மிகவும் பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகளில் இதுவும் ஒன்று.
வெந்தய ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?
2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் குளிர்ந்த இடத்தில் தண்ணீரில் ஊறவைக்கவும்.
ஊறவைத்த தண்ணீரைப் பயன்படுத்தி வெந்தயத்தை பேஸ்டாக அரைக்கவும்.
இதை உங்கள் தலைமுடியின் வேர்களில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
லேசான ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு முன் உச்சந்தலையில் சிறிது மசாஜ் செய்யவும்.
இது உங்கள் தலைமுடிக்கு பிரகாசத்தை அளிக்கிறது.
குறிப்பு: பேஸ்ட்டில், நீங்கள் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து, பொடுகு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்; அல்லது மிருதுவான, பளபளப்பான கூந்தலுக்கு 1 தேக்கரண்டி தேங்காய் பால் சேர்க்கலாம்.
அழகான, அடர்த்தியான முடிக்கு இந்த வெந்தய ஹேர்மாஸ்க் கண்டிப்பா டிரை பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“