சிக்கன் 65 போல் புதுவிதமாக முட்டை 65 ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். மொறு மொறுப்பாகவும், காரசாரமாகவும் செய்து அசத்துங்க.
தேவையான பொருட்கள்
முட்டை – 6
தயிர் – 1/2 கப்
மைதா மாவு – 1 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளவர் மாவு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் மைதா மாவு, கார்ன் ஃப்ளவர் மாவு, மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் நறுக்கி முட்டை துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவிடவும்.
பின்னர் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை துண்டுகளை போட்டு பொறித்து எடுத்தால் சுவையான முட்டை 65 ரெடி. சூடாக பரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“