சுவையான முட்டை அடை தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு- 100 கிராம்
பொட்டுக் கடலை- 1 கைப்பிடி
முட்டை- 5
வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 2
பச்சை அரிசி- 200 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
செய்முறை
முதலில் கடலைப் பருப்பு, பச்சரிசியை 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த கடலைப் பருப்பு மற்றும் அரிசி உடன் பொட்டுக் கடலை சேர்த்து மிக்ஸி/ கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்து வைத்துள்ள கடலைப் பருப்பு, பச்சரிசி கலவையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், முட்டை, உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் தயாரித்து வைத்துள்ள மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான, ஹெல்தியான முட்டை அடை தோசை ரெடி. தேங்காய், கார சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“