ஹெல்தி, டேஸ்டியான முட்டை சீஸ் ரோல் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். சிம்பிள் மற்றும் குறைவான நேரத்தில் செய்து முடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 3
உப்பு - தேவையான அளவு
சிவப்பு மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
பிரெட் துண்டுகள் - 3
வெண்ணெய் - 3 டீஸ்பூன்
சாண்ட்விச் சீஸ் - 3
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையுடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து கலக்க வேண்டும். தேவைப்பட்டால் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலக்கலாம்.
இப்போது இதை தனியாக வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு பிரெட் துண்டை எடுத்து அதன் ஓரங்களை நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பிரெட் துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சீஸ் தடவி வைக்க வேண்டும். அடுத்தது அடுப்பில் ஒரு தோசை கல் வைத்து சூடானதும் அதில் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்ற வேண்டும். பிறகு முட்டைகளை மெதுவாக கல்லில் பரப்பி அதன் மேல் சீஸ் தூவிய பிரெட்டை வைத்து முட்டையை கொண்டு சுற்றி கவர் போல் மூடவும். முட்டை மற்றும் பிரெட் நன்றாக வெந்தவுடன் எடுத்து பரிமாறலம் . அவ்வளவு தான் சுவையான முட்டை சீஸ் ரோல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“