வழக்கமான முட்டை மாசால போல் இல்லாமல், இது மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் ஈசிதான்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 1 ½ டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
பூண்டு – 10
வெங்காயம் – 1
வத்தல் – 3
கருவேப்பிலை – 1 ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி பொடி – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன்
காயப்பொடி – ஒரு சிட்டிகை
சிறிய அளவு தண்ணீர்
முட்டை – 4
உப்பு – தேவையான அளவு
செய்முறை : தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு நறுக்கியது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதைத் தொடர்ந்து வத்தல்ல, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், மிளகாய் பொடி, மல்லி பொடி, கரம் மசாலா, மஞ்சள் பொடி, காயப் பொடி சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் சிறிய அளவு தண்ணீர் ஊற்றவும். தொடர்ந்து வதக்கவும். தற்போது மாசலாவை ஒதிக்கிவிட்டு, முட்டையை உடைத்து ஊற்றவும். 3 நிமிடங்கள் வேக வைத்த பிறகு, உடைத்து கிளரவும். கரண்டியால் பெரிய துண்டுகளாக உடைத்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“