சுவையான முட்டை சுக்கா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டை- 5
சோம்பு- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன் தூள்
துருவிய தேங்காய்- 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 6
தக்காளி- 1
கிராம்பு- 2
பட்டை - 1 துண்டு
தனியா விதைகள்- 1 ஸ்பூன்
மிளகு- 3 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முட்டையை வேக வைத்து ஓட்டை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் உள்ள மஞ்சள் கருவை உடைக்காமல் தனியாக எடுக்கவும். வெள்ளை கருவை தனியாக எடுத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இப்போது மிக்ஸி ஜார் எடுத்து அதில் பட்டை, சோம்பு, தனியாத் தூள், மிளகு சேர்த்து அரைக்கவும். அடுத்து
துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடவும். பிறகு இதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நீர் ஊற்றி கிளறி விட வேண்டும். மசாலா நன்றாக வெந்து வந்ததும்
அதில் நறுக்கிய முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
இறுதியாக எடுத்து வைத்த மஞ்சள் கருவை சேர்த்து உடைக்காமல் மசாலாவில் கலந்து விட்டு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான முட்டை சுக்கா ரெசிபி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“