scorecardresearch

இனி அவித்த முட்டை உரிப்பது ரொம்ப ஈஸி.. இங்க பாருங்க

முட்டைகளை எப்படி சமைப்பது மற்றும் அவித்த முட்டையிலிருந்து ஓட்டை எப்படி உரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இனி அவித்த முட்டை உரிப்பது ரொம்ப ஈஸி.. இங்க பாருங்க
How to Peel Hard Boiled Eggs

நீங்கள் அடிக்கடி வேகவைத்த முட்டைகளை சாப்பிடுபவரா? அப்படியானால் அவித்த முட்டையிலிருந்து ஓட்டை உரிப்பது எவ்வளவு கடினமான வேலை என்று உங்களுக்கு தெரியும்.

முட்டைகளை உரிக்கும்போது கைகள் சூடாமல் இருக்க குளிர்ந்த நீரில் முட்டைகளை வைக்க வேண்டும். சில நேரம், முட்டை சரியாக வேகவில்லை என்றால், ஓட்டுடன் ஓட்டிக் கொண்டு தொல்லை செய்யும்.

ஆனால் இனி கவலைப்பட வேண்டாம். சரியான முட்டைகளை எப்படி சமைப்பது மற்றும் அவித்த முட்டையிலிருந்து ஓட்டை எப்படி உரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

டிப்ஸ் 1

முதலில் முட்டையை அகலமான பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றவும். முட்டையை விட ஒரு இஞ்ச் அளவுக்கு நீர் அதிகமாக இருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும்போது, அடுப்பை அணைத்து விட்டு வெப்பம் வெளியேறாதவாறு மூடி போட்டு மூடிவிடுங்கள்.

அப்படியே 10 நிமிடங்கள் சுடு தண்ணீரில் இருந்தால் முட்டை முழுமையாக வெந்திருக்கும். பிறகு அவற்றை குளிர்ந்த நீரில் மூழ்கும்படி போட்டு வெப்பம் குறைந்ததும் எடுத்து உரிக்கலாம்.

தொடர்ந்து பச்சை முட்டை சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின்-பி குறைபாடு வருவதற்கான வாய்ப்பு அதிகம்

டிப்ஸ் 2

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு முட்டைகளை வைத்து கொதிக்க விடவும். இந்த தண்ணீரில் 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்க்கவும். இது காரத்தன்மையை அதிகரித்து முட்டை ஓடுகளை உரிப்பதை எளிதாக்கும்.

டிப்ஸ் 3

தண்ணீரில் முட்டையைப் போட்டு வேக வைப்பதை விட, நாம் எப்படி அரிசி சாதம் சமைக்கிறோமோ அதுபோல, முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அது கொதி நிலைக்கு வரும் போது அதில் முட்டையைப் போட்ட 6 முதல் 7 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து விடலாம்.

என்ன ஈஸியாக இருக்கிறதா? இனி முட்டை வேகவைக்கும் போது இந்த தந்திரத்தை பயன்படுத்தி, முட்டை ஓடுகளே எளிதாக உரியுங்கள்..

குறிப்பு: புரோட்டா, பீட்சா, பப்ஸ் போன்ற மைதாவில் செய்த உணவுகளைச் சாப்பிடும்போது முட்டை சாப்பிடக் கூடாது. கடினமான உடற்பயிற்சி செய்பவர்களைத் தவிர மற்றவர்கள் பச்சையாக முட்டையைச் சாப்பிடக் கூடாது. தொடர்ந்து பச்சை முட்டை சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின்-பி குறைபாடு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Egg cooking hacks how to peel hard boiled eggs