சுவையான முட்டை லாலிபாப் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையானவை
முட்டை- 4
வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 1
மிளகாய் தூள்- கால் டீஸ்பூன்
தனியா தூள்- கால் டீஸ்பூன்
கரம் மசாலா தூள்- கால் டீஸ்பூன்
சீரகத் தூள் - கால் டீஸ்பூன்
மிளகு தூள்- கால் டீஸ்பூன்
பிரெட் தூள்- தேவையான அளவு
கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில் முட்டையை எப்போதும் போல் வேக வைத்து எடுக்கவும். அதை துருவிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து அதில் துருவிய முட்டைகளை போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய்,
கொத்தமல்லி, மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், உப்பு மற்றும் பிரெட் தூள் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து உருண்டைகளாக பிடிக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டை கலவையில் பிரட்டி பின்னர் பிரெட் தூளிலும் பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான முட்டை லாலிபாப் ரெடி. லாலிபாப் மேல் டூத் ஸ்டிக் குத்தி பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“