Egg Recipe Tamil News, Egg Recipe With Potato Making Video: உங்கள் நாளை ஆரோக்கியமாக தொடங்க சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளைத் தேடுகிறீர்களா? அப்படியெனில் கவலைப்பட வேண்டாம். நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இந்த முட்டை டிஷ் உங்கள் நாளை சிறப்பாக்கும். முட்டை குறித்த மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், அவற்றை நீங்கள் கற்பனை செய்யக்கூடிய பல வழிகளிலும் சமைக்கலாம். சத்தான காய்கறிகளை சேர்த்து எப்படி வேண்டுமானாலும் அதை சாப்பிடலாம். ஆம்லெட் மற்றும் எக் ரோல் சாப்பிட்டு, போரடிக்கிறது. வேறு ஏதாவது முயற்சி செய்யலாம் என உங்களுக்கு தோன்றினால், இங்கே ஒரு அற்புதமான ஐடியா உள்ளது.
இந்த குட்டி குழந்தைகள் யார்ன்னு தெரியுதா? – புகைப்படத் தொகுப்பு!
ஊட்டச்சத்து நிபுணர் மமி அகர்வால் இந்த குறிப்பை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். “முட்டை, கீரை மற்றும் துண்டாக்கப்பட்ட சர்க்கரை வள்ளி கிழங்கைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த ஸ்வீட் பொடேடோ எக் கேசரோல் உங்கள் சுவை மொட்டுகளுக்கு சரியான விருந்தாகும். இதை தயாரிப்பது, நிரப்புவது எளிதானது. விடுமுறை நாட்களில் காலை உணவு, மதிய உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உருளைக்கிழங்கிற்கு பதிலாக சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆரோக்கியம் நிறைந்தது. நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி இதில் நிறைந்துள்ளது.
Egg Recipe With Potato Egg Recipe Making Video: முட்டை மரவள்ளிக் கிழங்கு ரெசிபி
தேவையானப் பொருட்கள்
1 - மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக் கிழங்கு
1 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
அரை தேக்கரண்டி - மிளகு
40 கிராம் - வேகவைத்த கீரை
50 மில்லி - குறைந்த கொழுப்புள்ள பால்
20 கிராம் - வெங்காயம்
1 தேக்கரண்டி - ஜலபெனோஸ்
கால் தேக்கரண்டி - பூண்டு தூள்
கால் தேக்கரண்டி - வெங்காய தூள்
கால் தேக்கரண்டி - மிளகாய் தூள்
சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகு தூள்
செய்முறை
முதலாவதாக, ஓவனை 350 டிகிரி செல்சியஸுக்கு சூடாக்கவும்.
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் முட்டை மற்றும் அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். சில நொடிகளுக்குப் பிறகு, வெங்காயம், ஜலபெனோஸ், பால் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது கீரை அதைத் தொடர்ந்து துண்டாக்கப்பட்ட சர்க்கரை வள்ளிக் கிழங்கை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் இந்த கலவையை ஒரு பேக்கிங் ட்ரேயில் மாற்றி, மேற்புரத்தை சமமாக்கவும். சில நிமிடங்கள் வேக விடுங்கள்.
இறுதியாக அடுப்பிலிருந்து இறக்கி சிறிய சதுரங்களாக வெட்டவும்.
ஆரோக்கியமான காலை உணவு தயார்!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”