முட்டை வைத்து புது விதமான ரெசிபி செய்யுங்க. வீட்டிலேயே சுவையான முட்டை சுக்கா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடுகு- கால் டீஸ்பூன்
சோம்பு- கால் டீஸ்பூன்
முட்டை- 5
மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- 1 ஸ்பூன்
வெங்காயம்- 1 கப் (நறுக்கியது)
இஞ்சிபூண்டு பேஸ்ட்- கால் டீஸ்பூன்
தயிர்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 5 முட்டைகளை உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மஞ்சள் தூள், மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து தண்ணீர் ஊற்றி அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி அதனுள் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்னர் இந்த முட்டை கலவை கெட்டியாக வந்ததும் அதை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். இப்போது அடுப்பில் மீண்டும் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு காய்ந்த மிளகாய் தாளித்து அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதில் சிறிதளவு இஞ்சுபூண்டு விழுந்து சேர்க்க வேண்டும். பச்சை வாடை போன பிறகு அதில் மிளகாய்தூள், மஞ்சள் தூள், மிளகு, சீரகம் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் 1 ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்து வதக்கி அதில் நறுக்கி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து கிளறி விடவும். அவ்வளவு தான் சுவையான முட்டை சுக்கா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“