முட்டை சாப்பிடுவதால், புரத சத்து கிடைப்பதோடு, சுகர் அளவும் சீராக மாறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் குறைந்த விலையில் கிடைக்கும் புரத சத்து உணவு முட்டைதான். இந்நிலையில் இதை அதிகமாக சாப்பிட்டால், உடல் எடை அதிகரித்தல், இதய நோய் ஏற்படும். ஒரு வளர்ந்த நபர் தினமும் 2 முட்டை வரை மட்டுமே சாப்பிடலாம்.
சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் சுகர் பேஷண்ட்ஸ் தினமும் ஒரு முட்டை சாப்பிடும்போது, ரத்த சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகமாக முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு 68 % அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது. 38 கிராம் தினமும் நாம் முட்டை எடுத்துகொண்டால், சுகர் வரும் வாய்ப்பு 25 % ஆக உள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக முட்டை சாப்பிட்டால், கூடுதல் கொலஸ்ட்ரால், கொழுப்பு சத்து உள்ளது. இதில் இதய நோய்க்கான அபாயமும் அதிகம். அதிகமாக முட்டை சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பநிலை அதிகமாகும். மேலும் பருக்கள் வரும் சாத்தியம் அதிகம்.
அதிக எண்ணெய் சேர்த்து வறுத்து சாப்பிட்டால், கொழுப்பு சத்து மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“