முடியை உறுதியாக்கும் முட்டையின் வெள்ளைக் கரு; எண்ணெய் கூட சேர்த்து இப்படி பண்ணுங்க!
முட்டையின் வெள்ளைக் கருவை கொண்டு தலை முடியின் வேர்ப்பகுதியை எப்படி உறுதியாக மாற்றுவது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை செய்வதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையையும் கட்டுப்படுத்த முடியும்.
முட்டையின் வெள்ளைக் கருவை கொண்டு தலை முடியின் வேர்ப்பகுதியை எப்படி உறுதியாக மாற்றுவது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை செய்வதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையையும் கட்டுப்படுத்த முடியும்.
இப்போது காய்ச்சலால் மருத்துவர்களை அணுகுபவர்களை விட தலை முடி உதிர்வு பிரச்சனையால் மருத்துவர்களிடம் செல்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது.
Advertisment
ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவர்களுக்கும் முடி உதிர்வு இருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், மன அழுத்தம், நாம் பார்க்கும் வேலையின் தன்மை, தூக்கமின்மை என பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்காக எத்தனையோ ஷம்பூக்கள், சீரம் போன்றவை கடைகளில் விற்பனை ஆகின்றன. ஆனால், இவற்றில் இருக்கும் இரசாயனங்கள் சில சந்தர்ப்பங்களில் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
இது மட்டுமின்றி முடியின் வேர்ப்பகுதியை வலுப்படுத்தாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியாது. அந்த வகையில் தலை முடியின் வேர்ப்பகுதியை வலுவாக்க சிம்பிளான ஹோம்மேட் ஹேர்பேக்கை நாம் தயாரித்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்து, அத்துடன் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நம் தலை முடிக்கு தேவையான ஹேர்பேக் தயாராகி விடும்.
இதனை தலை முடியின் வேர்ப்பகுதியில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். முட்டையில் இருக்கும் புரதச் சத்து முடியின் வேர்ப்பகுதியை வலுவாக மாற்றும். மேலும், தலை முடியை சாஃப்டாக மாற்றவும் இதனை பயன்படுத்தலாம்.
நன்றி - Health Today Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.