New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/cookies.jpg)
amazing,eggless,cookie,recipes,முட்டை,குக்கீஸ்,தயாரிப்பு
Eggless cookies : கேக், கப் கேக், குக்கீஸ் போன்றவற்றில் முட்டை சேர்க்காமல் செய்யப்படுகின்றது. இருந்தும் அதன் ருசி மாறாமல் இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? மேலும் வீகன் டயட்டை பின்பற்றுபவர்கள் முட்டை சேர்க்கப்படாத ரெசிபிகளை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
amazing,eggless,cookie,recipes,முட்டை,குக்கீஸ்,தயாரிப்பு
எல்லா டெசர்ட் ரெசிபிகளிலும் பொதுவாக முட்டை சேர்க்கப்படும். ஆனால் இப்போதெல்லாம் முட்டை சேர்க்கப்படாமலேயே நிறைய உணவுப்பொருட்கள் செய்யப்படுகின்றன.
கேக், கப் கேக், குக்கீஸ் போன்றவற்றில் முட்டை சேர்க்காமல் செய்யப்படுகின்றது. இருந்தும் அதன் ருசி மாறாமல் இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? மேலும் வீகன் டயட்டை பின்பற்றுபவர்கள் முட்டை சேர்க்கப்படாத ரெசிபிகளை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
முட்டை சேர்க்காமல் செய்யக்கூடிய குக்கீஸ் தயாரிக்கும் முறைகள் உங்களுக்காக...
1. கோதுமை வால்நட் குக்கீஸ்:
முழு கோதுமையில் நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. வால்நட்டில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் புரதம் இருக்கிறது. எனவே கோதுமையுடன் வால்நட் சேர்த்து குக்கீஸ் தயாரிக்கலாம்.
2. பட்டர் குக்கீஸ்:
பட்டரில் தயாரிக்கப்படும் மொறுமொறுப்பான பட்டர் குக்கீசை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பட்டரின் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
3. சாக்லேட் சிப் குக்கீஸ்:
சாக்லேட் சிப் குக்கீஸ் யாருக்குத்தான் பிடிக்காது? மிகவும் மிருதுவாகவும், சாக்லேட்டின் ருசியும் குக்கியை இன்னும் சுவையாக்கும்.
4. ஓட் மீல் பாதாம் குக்கீஸ்:
பாதாம் சேர்த்து குக்கீஸ் தயாரிப்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கிறது. உடல் எடை குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் ஓட் மீல் சேர்த்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.