Eid al-Adha : ஹஜ் எனும் புனிதப் பயணமும் அதன் வழிபாடுகளும் மாபெரும் ஓர் இறைத்தூதரின் மகத்தான தியாகங்களை நினைவூட்டும் செயல்களாகும். அந்தப் புனிதப் பயணத்தின் நிறைவாகக் கொண்டாடப் படுவதுதான் “தியாகத் திருநாள்.”
இன்று தியாகத் திருநாளான பக்ரீத் (Bakrid) பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில், சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான ’துல் ஹஜ்’ஜின் 10வது நாளில் இந்த பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது.
இஸ்லாமியர்களின் விஷேச திருநாளான இன்று, பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். முதல்வர் பழனிசாமி தொடங்கிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் சமூகவலைத்தளங்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். உலக நாடுகளிலும் பக்ரீத் தொழுகை மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. புகைப்படத் தொகுப்பாக இதோ உங்கள் பார்வைக்கு..
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-29.jpg)
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள பஞ்ச ஷரீஃப் தர்காவில், தியாகத் திருநாளையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-16-300x192.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-13.jpg)
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள இத்கா மசூதியில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், சிறப்பு தொழுகைகள் செய்னர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-14.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-15.jpg)
இந்த சிறப்பு மிக்க நாளில் உங்களின் இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்து சொல்ல மறவாதீர்கள்.