Eid al-Fitr 2022,Ramadan 2022, Ramadan Fasting, Messages, status, Images, sms, whatsapp Messages ,wishes, Greetings, Quotes- இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான நோன்பு காலம் முடிந்து ஈகைத் திருநாள் எனும் ரமலான் மே 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். ரமலான் மாதத்தில்தான் அருள் மறை திருக்குர்ஆன் முகமது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் இந்த மாதத்தில்தான் இறைவன் திருவேதங்களை அருளியுள்ளான்.
இந்த மாதத்தில் பிறை தென்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்கு நோன்பு கடைப்பிடிக்கப்படும். பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் இது கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு ஏப். 3 அன்று அதிகாலை தொடங்கியது.
இம்மாதம் முழுவதும் அதிகாலை 4 மணியளவிலிருந்து மாலை 6.30 மணி வரை இஸ்லாமியா்கள் உண்ணாமலும், நீா் பருகாமலும் நோன்பு இருப்பா். இரவில் சிறப்புத் தொழுகையிலும் ஈடுபடுவா்.
ரமலான் மாதம் முழுவதும் முடிந்தவரை ஏழைகளுக்குத் தர்மம் செய்ய வேண்டும். ரமலான் மாதத்தில் நாம் செய்யும் நன்மையின் பலன் பன்மடங்கு அதிகரிக்கும் என்று திருக்கூரானில் கூறப்பட்டுள்ளது.
நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சி வழங்கல், சகோதரத்துவத்தை பேணும் வகையில் அனைத்து மதத்தினரையும் அழைத்து பல்வேறு தரப்பினா் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.
இந்தியாவை பொறுத்தவரையில், சவுதி அரேபியாவில் பிறை சந்திரனைப் பார்த்த ஒரு நாளுக்குப் பிறகு ஈத் பொதுவாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தாண்டு, சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஷவ்வால் பிறை தென்படாத நிலையில், இன்று (மே.2) அங்கு ரமலான் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மே 3ஆம் தேதி ரமலான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். இதையடுத்து இஸ்லாமியர்கள் பண்டிகை கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இந்த நாளில், ஒன்று கூடி நோன்பு துறக்கிறார்கள். அதுமட்டுமின்றி, இந்நாளில் மக்கள் தங்களிடம் உள்ள அனைத்திற்கும் நன்றியை வெளிப்படுத்தி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றனர். அதிகாலையில் எழுந்து புது ஆடைகள் உடுத்தி தங்களின் அன்புக்குரியவர்களை வாழ்த்துவார்கள். இந்த இனிய நாளில் அன்பானவர்களுக்கு பகிர, உங்கள் மனதைக் கவரும் இனிய ரமலான் வாழ்த்துகள் மற்றும் படங்கள் இங்கே உள்ளன.
ரமலான் 2022 வாழ்த்துகள் மற்றும் படங்கள்!

*ரமலான் என்பது அல்லாஹ்வின் அனைத்து பரலோக ஆசீர்வாதங்களுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்தும் நாள். உங்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்!

*இந்த ரமலான் உங்கள் இதயத்தில் மகிழ்ச்சியையும் அன்பையும் கொண்டு வந்து உங்களுக்கு வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கட்டும்! இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!

*சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் ஈத் முபாரக். எல்லாம் வல்ல இறைவன் எங்கள் வாழ்க்கையை அழகாகவும், நமது போராட்டங்களை அர்த்தமுள்ளதாகவும் ஆக்க வேண்டும் என்று என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து பிரார்த்திக்கிறேன்.

* ரமலான் இறுதியாக மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நம்மை ஆசீர்வதிக்க வந்துள்ளது. இந்த நாள் நமக்கு என்றும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். இனிய ரமலான் வாழ்த்துகள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“