Eid Mubarak 2020 wishes, images: தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டங்களை கொண்டாடினர்.
ஏப்ரல் 24-ந் தேதி முதல் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வந்தனர். 30 நாட்கள் நோன்பு முடிந்த நிலையில் கேரளா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
ரம்ஜான் பண்டிகையை உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து கூறிக்கொண்டாடிட இதோ அழகிய புகைப்படங்கள்
தமிழகத்தில் ஈகைப் பெருநாள் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஈத் முபாரக் என்றும் ரமலான் வாழ்த்துகளையும் தெரிவிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ் உங்களுக்காக சிறப்பாக டிசைன் செய்து அழகிய ரமலான் வாழ்த்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.
ரமலான் பண்டிகை உலகம் முழுவது உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈத் உல்-பித்ர் ரம்ஜான் பண்டிகை புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. ரமலான் பண்டிகை தேதி ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடலாம் என்றாலும், சர்வதேச வானியல் மையம் (ஐஏசி) மே 23 ஈத் உல்-பித்ர் ரமலான் பண்டிகை என்று கொண்டாடப்படும் என்று கூறியுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் பிறை தெரிந்த பிறகு, திங்கள் கிழமை இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மக்கள் ஈகைப் பெருநாளில் தங்கள் உறவினர்களைப் சந்தித்து இஃப்தார் என்று அழைக்கப்படும் விருந்தினர்களை விருந்தளிக்கிறார்கள். தங்கள் அன்புக்குரியவர்களைக் கட்டிப்பிடித்து, இந்த நாளில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். இருப்பினும், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக, விழாக்கள் பொது முடக்கம் மற்றும் தனிநபர் இடைவெளியுடன் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.
அதனால், ரமலான் பண்டிகை நாளில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஈத் முபாரக் என்றும் ஈகைப் பெருநாள் வாழ்த்து என்றும், ரமதான் வாழ்த்து என்றும் வாழ்த்துகளைப் பலவிதமாக பல வண்ணங்களில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் அழகிய புகைப்படங்களைக் கொண்டு சிறப்பாக டிசைன் செய்யப்பட்ட ரமலான் வாழ்த்து, ஈத் முபாரக் வாழ்த்து புகைப்படங்களையும் வாஸ் போஸ்டர்களையும் வாழ்த்து மேற்கோள்களையும் வழங்குகிறது. உங்கள் அன்பானவர்களுக்கு தெரிவித்து ரமலான் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.