Elaneer Payasam recipe Elaneer Payasam in tamil : சுவையான தேங்காய் தண்ணீரை அப்படியே குடித்தாலே பாயாச சுவையில் இருக்கும்.
Advertisment
அதில் இப்படி பாயாசமே செய்து சாப்பிட்டால் நாவில் நீங்காத சுவையாக இருக்கும்
ஜவ்வரிசி, பருப்பு, சேமியா பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சூப்பரான இளநீர் பாயாசம்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள் :
இளநீர் வழுக்கை – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
மில்க்மெய்டு – மூன்று டீஸ்பூன்
சுண்ட காச்சிய பால் – ஒரு கப்
தேங்காய் பால் – ஒரு கப்
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – மூன்று டீஸ்பூன்
முந்திரி – பத்து
திராட்சை – பத்து
சாரை பருப்பு – இரண்டு டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நன்கு குழைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்டு, பால், தேங்காய் பால், ஏலக்காய் தூள், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.பிறகு, கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சை, சாரை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து அந்த பாத்திரத்தில் கொட்டி கிளறி பரிமாறவும்.
இன்னொரு முறை:
சிறிதளவு இளநீர் வழுக்கைத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு தேங்காய்பால் சேர்த்து கலந்து இறக்கவும்.
மேலே இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகலாம்.