பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை ஒரு நாளைக்கு சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் மின்சார ரயில் சேவைகளை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதில் தொடங்கி, நீண்ட பயணங்கள் மேற்கொள்வது வரை சாமானிய மக்களின் முக்கிய தேவையாக மின்சார ரயில் இயங்கி வருகிறது.
இதனால் பராமரிப்பு பணிகள் காரணமாக சில சமயங்களில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதும் நடைபெறுகிறது. அந்த வகையில், பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு 11:15 மணிக்கு திருவள்ளூர் புறப்படும் மின்சார ரயில் பராமரிப்புப் பணி காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11:40 மணிக்கும், நள்ளிரவு 12.15 மணிக்கும் ஆவடி புறப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இரவு 10:15 மணி ஆவடி புறப்பட இருந்த மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.