தற்போது வெயில் காலம் முன்பே தொடங்கி விட்டது. இந்நிலையில் இதன் காரணமாக அதிக வியர்வை, உடலில் உள்ள தேவையான திரவங்கள் இழப்பு ஏற்படும். மேலும் கடும் சோர்வு ஏற்படும். இந்நிலையில் இதிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள, நாம் எலக்ட்ரோலைட் உள்ள பானங்களை எடுத்துகொள்ள வேண்டும்.
இளநீர்
இந்நிலையில் வெயில் காலத்தில் நம்மை காப்பற்றும் ஒரே பானம் இதுதான். இதில் எலக்ட்ரோலைட்டான பொட்டாஷியம், மெக்னிஷியம், சோடியம் உள்ளது. இதனால் நமது உடலில் உள்ள நீர் சத்தை வரட்சியடையாமல் பார்த்துகொள்ளும். இதில் இயற்கையான சர்க்கரை இருப்பதால், உடலுக்கு சக்தி கொடுக்கும்.
நிம்பு பானி
எலுமிச்சை சாறு மற்றும் அதில் தண்ணீர் சேர்த்து, கொஞ்சம் உப்பு சேர்த்து குடிக்கலாம். இதனால் நமக்கு எடுக்கும் தாகம் குறைவதோடு, வைட்டமின் சி சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டை மீண்டும் கொடுக்கிறது.
மோர்
இது ப்ரோபயாட்டிக் பானமாக உள்ளது. மேலும் இதில் தண்ணீர், பொடி செய்த சீரகம், உப்பு சேர்த்து நாம் குடிப்போம். இது ஒரு குளிர்ச்சியை கொடுக்கும். ஜீரணத்தை சீராக்கும். வியர்வையால் ஏற்பட்ட எலக்ட்ரோலைட்டை இழப்பை இது சரி செய்யும்.
மேலும் எப்போதும் தண்ணீர் பாட்டில் உடன் வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் குடிக்க வேண்டும். இதுபோல தண்ணீர் பூசணி, வெள்ளரிக்காய் போன்ற பழங்களை நாம் எடுத்துகொள்ளலாம். அதிகம் ஸ்வீட் உள்ள பானங்களை நாம் எடுத்துகொள்ளக் கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“