/indian-express-tamil/media/media_files/2025/03/10/FySlFMhkHq3r18Y4UKuq.jpg)
சாலையில் உலா வந்த யானை
ஊட்டி சாலையில் சாலையோர தர்பூசணி கடைக்குள் நுழைந்து சூறையாடிய பாகுபலி யானை விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, சமயபுரம், நெல்லித்துறை, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்த யானை பகல் வேளைகளில் வனப்பகுதிக்குள்ளும், இரவு வேளைகளில் விலை நிலங்களுக்குள்ளும் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகிறது.
இதுவரை இந்த யானை மனிதர்கள் எவரையும் தாக்கவோ, தாக்க முயற்சிக்கவோ இல்லை என்றாலும் பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை பரபரப்பான சாலையில் ஜாலியாக நடந்து வந்தது.
தர்பூசணியை திருடி ஓடிய ஒற்றை காட்டுயானை...!#ooty#elephantpic.twitter.com/4rF85iJNdQ
— Indian Express Tamil (@IeTamil) March 10, 2025
தொடர்ந்து அங்கு தனியார் பெட்ரோல் பங்க் அருகே விற்பனைக்காக சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து ருசி பார்த்தது. அப்போது,அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யானையை விரட்ட முற்பட்டு சப்தமிட்டும் எவரையும் சட்டை செய்யாமல் தர்பூசணி பழங்களை ருசி பார்த்தது.
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானை பாகுபலியை சப்தமிட்டும், யானை விரட்டும் வாகனங்கள் மூலமும் வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பி வைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.