எள்ளு பொடி இனி இப்படி செய்யுங்க. செம்ம சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: எள் - 1 கப், உளுந்தம் பருப்பு - 1/4 கப், கடலைப்பருப்பு - 1/4 கப்,காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - 1/4 டீ ஸ்பூன், உப்பு - தேவைக்கு ஏற்ப, எண்ணெய் - தேவையான அளவு
எள்ளு பொடி செய்முறை:
வாணலி சூடானதும் எள்ளை போட்டு, பொரியும் வரை வறுத்தெடுங்கள். பிறகு அதை தனியாக எடுத்து வைக்கவும். மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் , பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக வறுக்கவும். கடைசியாக எள்ளு, உப்பு சேர்த்து கிளற வேண்டும் .
வறுத்து முடித்து, இந்தக் கலவை ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து எடுங்கள். இப்போது சுவையான எள்ளு பொடி தயார் ! ஒரு முறை எள்ளுப் பொடி தயாரித்தால், ஒரு மாதம் வரை பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம். எனவே அடிக்கடி டிபன், டின்னருக்கு சைட் டிஷ் தேடும் வேலை மிச்சமாகும்.