Advertisment

கொரோனா நெருக்கடி: பணத் தேவைகளுக்கு இந்த வாய்ப்பை கவனித்தீர்களா?

Employees' Provident Fund Organisation: பணபுழக்க நெருக்கடியில் சிக்கி தவிக்கும் 4.3 கோடி ஊழியர்களுக்கும், 6.5 லட்சம் நிறுவனங்களுக்கும் இந்த முடிவு பயனளிக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EPFO, ESIC

EPFO Tamil News: கரோனா வைரஸ் சிறப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திரும்ப பெறுதல் திட்டத்தை சுமார் 12 லட்சம் பணியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். மேலும் ரூபாய் 3,600 கோடி இதுவரை ஈபிஎப்ஓ’வால் வழங்கப்பட்டுள்ளது. இது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன சந்தாதாரர்கள், தங்களது சேமிப்பில் 75 சதவிகிதம் அல்லது அதிகப்பட்சமாக அகவிலைபடியுடன் மூன்று மாதம் வரையிலான அடிப்படை ஊதியம் ஆகியவற்றில் எது குறைவாக வருகிறதோ அதை தங்களது பிஎப் கணக்கிலிருந்து எடுக்கலாம்.

ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள இன்னல்களை எதிர்கொள்வதற்காக, மார்ச் 28 ஆம் தேதி, ஈபிஎப்ஓ தனது வரம்புக்குள் வரும் formal sector ஊழியர்களை அவர்களது ஓய்வூதிய சேமிப்பிலிருந்து non-refundable முன்பனத்தை எடுப்பதற்கு அனுமதித்தது.

ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய இருவருக்கும் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பில் முன்பிருந்த 12 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகித குறைப்பை அடுத்த மூன்று மாதங்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதிகம் பிடித்தம் இல்லாமல் ஊழியர்கள் சம்பளம் பெறவும், நிறுவனங்களுக்கு பிஎப் பணம் செலுத்துவதிலிருந்து ஒரு நிவாரணத்தை கொடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பணபுழக்க நெருக்கடியில் சிக்கி தவிக்கும் 4.3 கோடி ஊழியர்களுக்கும், 6.5 லட்சம் நிறுவனங்களுக்கும் இந்த முடிவு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடுதழுவிய ஊரடங்கின் போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு செலுத்துவதில் நிறுவனங்களுக்கு ஏதாவது காலதாமதம் ஏற்பட்டால் அதற்காக எந்தவித அபராதத்தையும் விதிக்க போவதில்லை என ஓய்வூதிய நிதி அமைப்பான ஈபிஎப்ஓ முடிவு செய்துள்ளது.

கோவிட்-19 பரவலை தடுப்பதற்காக அரசால் மார்ச் 25 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வணிகங்கள் பணப்புழக்கம் அல்லது பண நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இதன் காரணமாக அவர்கள் கட்டாயம் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி நிலுவைகளை கட்டுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

நிறுவனங்கள் மாத சம்பளத்தின் நிலுவைத் தொகைகளை அடுத்த மாதம் 15 ஆம் தேதி டெப்பாசிட் செய்ய வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Epfo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment