Advertisment

பரோட்டாவுக்கு மட்டும் இல்ல, இதுக்கும் சூப்பர் சைட் டிஷ்: வெங்கடேஷ் பட் எம்டி சால்னா ரெசிபி

வெங்கடேஷ் பட் எம்டி சால்னா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
 Empty Salna.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எம்டி சால்னா பொதுவாகவே பரோட்டாவுக்கு சைட் டிஷ் என்று தான் நமக்கு தெரியும். ஆனால் இப்படி செய்தால் நெய் சோறு, இடியாப்பம், பரோட்டா, பூரி, கல் தோசைக்கு நன்றாக இருக்கும். வெங்கடேஷ் பட் செய்த எம்டி சால்னா ரெசிபி குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

கடலை எண்ணெய் 3 தேக்கரண்டி
ஒரு மூடி தேங்காய் 
 கசகசா , சோம்பு 1 டீஸ்பூன்
முந்திரி 1 கைப்பிடி 
பட்டை, பிரின்ஜி இலை, ஏலக்காய்
லவங்கம்
பெரிய வெங்காயம் 2 
பச்சை மிளகாய் 4
கறிவேப்பிலை, புதினா 
கொத்தமல்லி 
தக்காளி 2 
மஞ்சள் தூள்,  சிவப்பு மிளகாய் தூள் , தனியாத் தூள், கரம் மசாலா 
கடலை மாவு 

செய்முறை  

அடுப்பில் கடாய் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து ஒரு மூடி தேங்காய் எடுத்து அதில் சோம்பு, கசகசா, முந்திரி எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது   எண்ணெயில் பட்டை, பிரின்ஜி இலை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து வதக்கவும். அதில் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து சிறிதளவு உப்பு போட்டு இஞ்சி, பூண்டு விழுது அதிகம் சேர்த்து வதக்க விடவும். 

அடுத்து பச்சை மிளகாய் கீறி சேர்க்கவும். கறிவேப்பிலை, புதினா  சேர்க்கவும். இது கட்டாயம். அப்புறம் கொத்தமல்லி, தக்காளி  சேர்க்கவும். அடுத்து மஞ்சள் தூள்,  சிவப்பு மிளகாய் தூள் , தனியாத் தூள், கரம் மசாலா சேர்க்கவும். ,இப்போது சால்னாவுக்கு தேவையான உப்பு சேர்த்து 250 மி தண்ணீர் ஊற்றி வேக விடவும்.  

இப்போது ஒன்றரை டேபிள் ஸ்பூன் கடலை மாவு எடுத்து 50 மி தண்ணீர் சேர்த்து கரைக்கவும். அடுத்து ஏற்கனவே அரைத்து வைத்த சோம்பு, கசகசா, முந்திரி அரைத்த பேஸ்ட் சேர்க்கவும். அடுத்து முக்கால் லிட்டர் தண்ணீர் ஊற்றவும். கொதி வந்த பின் கரைத்து வைத்த கடலை மாவு சேர்க்கவும். அவ்வளவு தான் நன்கு வேக வைத்து எடுத்தால் எம்டி சால்னா ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment