ஒரு முறை இப்படி சால்னா செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 3
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
சோம்பு – 2 டீஸ்பூன்
முந்திரி – 5
ஏலக்காய் – 5
கிராம்பு -5
பட்டை- 2
பிரியாணி இலை – 2
மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன்
தனியாத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவியது - 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி புதினா – 1 கைப்பிடி
செய்முறை:
சால்னா செய்ய முதலில் மசாலாவை அரைத்து கொள்ளவும். மசாலா செய்ய அடுப்பில் பேன் வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் காய்ந்த பிறகு, இரண்டு வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியவுடன் சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, கல்பாசி எல்லாம் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். அடுத்து துருவிய தேங்காயும், முந்திரியும் சேர்த்து வதக்கவும். அடுப்பை அணைத்து விட்டு இதை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். பின்பு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
அதே மிக்ஸி ஜாரில் 2 தக்காளியையும் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். அடுத்ததாக மீண்டும் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை பிரியாணி இலை சேர்க்கவும். உடன் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். இவை வதங்கிய பிறகு அரைத்து வைத்த தக்காளியை சேர்க்கவும்.
இப்போது, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா அனைத்தையும் சேர்க்கவும். இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்த மசாலாவையும் இதில் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி வைக்கவும். குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும். கடைசியாக புதினா கொத்தமல்லி தழைகளை தூவி சால்னாவை இறக்கி வைக்கவும்.