வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி, சுயதொழில் செய்பவராக இருந்தாலும் சரி, வீட்டு வேலைகளை பார்ப்பவராக இருந்தாலும் சரி எல்லோருக்கும் அன்றைய பணி முழுவதையும் உற்சாகமாக செய்வதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம்.
அவ்வாறு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நாம் சாப்பிடும் உணவு மற்றும் குடிக்கும் பானம் சத்தானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளும் உணவுகள், பானங்கள் தான் அன்றைய தினம் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதற்கு தூண்டுகோலாக இருக்கும்.
பெரும்பாலானோர் காலை நேரத்தில் டீ அல்லது காபி போன்றவற்றை குடிப்போம். ஆனால், மருத்துவர் சிவராமன் இஞ்சி, எலுமிச்சை, தேன் ஆகியவற்றை கலந்து குடிப்பதால் நாம் மிகுந்த உற்சாகமாக செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இஞ்சிச் சாறு 5 மி.லி, எலுமிச்சை சாறு 5 மி.லி, இனிப்புக்காக தேன் ஆகியவற்றை வெந்நீருடன் கலந்து இளஞ்சூடாக குடிக்க வேண்டுமென மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இந்த பானம் நம்மை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருப்பதுடன், வாய்வு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைவதாகவும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“