Advertisment

சுடச்சுட எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... அட்டகாசமான ருசியில்!

கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த எண்ணெய் கத்தரிக்காயை விரும்பி சாப்பிடுவார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ennai kathirikai kulambu recipe ennai kathirikai kulambu

ennai kathirikai kulambu recipe ennai kathirikai kulambu : சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு. கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த எண்ணெய் கத்தரிக்காயை விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisment

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான குழம்பு வகை

செய்முறை :

* கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள காம்பை விட்டு ஒரு கத்தரிக்காயை (பூ போல) நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.

* தக்காளி, கொத்தமல்லி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும்.

* மிக்சியில் வதக்கிய வெங்காயம், தக்காளியை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.

* அடுத்து கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும்.

* கத்தரிக்காய் சற்று வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும்.

* இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும்.

* அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.

* நன்கு கொதித்து கத்தரிக்காய் வெந்து குழம்பு திக்கான பதத்துடன் எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment