Ennai Kathirikai Kulambu Tamil Video, Brinjal Kulambu Recipe: தென் இந்திய உணவு வகைகளில் கத்தரிக்காய் தவிர்க்க முடியாதது. சாம்பார், கூட்டு, குழம்பு என ஏதாவது ஒரு ரூபத்தில் கத்தரிக்காயை பயன்படுத்துவோம். பலருக்கு கத்தரிக்காய் வாசம் இருந்தால்தான், சைவச் சாப்பாடு களை கட்டும்.
Advertisment
இதே கத்தரிக்காயை பயன்படுத்தி தயாரான, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சாப்பிட்டது உண்டா? மணமும், டேஸ்டும் மிகுந்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எப்படி செய்வது? என இங்கு பார்க்கலாம்.
Brinjal Kulambu Recipe: எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
Advertisment
Advertisements
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 10, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பற்கள், தக்காளி - 1, புளி - எலுமிச்சையின் அளவு, சிவப்பு மிளகாய் தூள் - 2 - 3 டீ ஸ்பூன், தனியா பொடி -2 டீ ஸ்பூன், உப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்கத் தேவையானவை: எண்ணெய் - 1/4 கப், கடுகு - 1 டீ ஸ்பூன், வெந்தயம் - 2 சிட்டிகை, கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்முறை:
கத்தரிக்காய் காம்புகளைக் கிள்ளாமல் அதன் அடிப்பகுதியில் X ஷேப்பில் நறுக்கிக் கொள்ளவும். பின் அவற்றை பயன்படுத்தும் வரை தண்ணீரில் போட்டு வைக்கவும். ஒரு சிறிய கின்னத்தில் புளியை ஊற வைக்க வேண்டும்.
சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உறித்து அவற்றையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் புளித் தண்ணீர், சிவப்பு மிளகாய், தனியா, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கெட்டியான பேஸ்ட் போல் கலக்கியதும் அவற்றை நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்களின் இடையே ஸ்டஃப் போல நிரப்பவும்.
பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் சேர்த்து பொறிக்கவும். பின் சிறிய வெங்காயம், பூண்டு , கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்க வேண்டும். அடுத்ததாக மிளகாய் தூள், ஸ்டஃப் நிறைந்த கத்தரிக்காய்களைச் சேர்க்கவும். தொடர்ந்து, புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறவும்.
கடைசியாக குக்கரை மூடி, குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும். விசில் வந்ததும் குக்கரை இறக்கி கொத்தமல்லி தழைகளைத் தூவி விடவும். இப்போது டேஸ்டியான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"