The entry permit and visa process for entering the UAE, some new changes have been announced to come into effect next month....| ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைவதற்கான நுழைவு அனுமதி மற்றும் விசா நடைமுறையில் சில புதிய மாற்றங்கள் அடுத்த மாதம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
புதிய அமைப்பு’ பயணிகளுக்கு முதல் முறையாக ஹோஸ்ட் அல்லது ஸ்பான்சர் தேவையில்லாமல் வெவ்வேறு வருகை நோக்கங்களுக்காக பல்வேறு வகையான விசா வகைகளை வழங்குகிறது. இந்த விசாக்கள் பயணிகளின் தேவைகளையும், வருகையின் நோக்கத்தையும் பூர்த்தி செய்யும் நெகிழ்வான காலங்களை வழங்குகின்றன.
இந்த புதிய நுழைவு அனுமதிகள்’ ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஒரு கவர்ச்சியான சுற்றுலாத் தலமாக்க’ வெளிநாட்டவர்கள் பல்வேறு வகையான விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை விரிவுபடுத்தும்.
நடைமுறைக்கு வரும் புதிய நுழைவு அனுமதி மற்றும் சுற்றுலா விசா மாற்றங்களின் பட்டியல்:
விசிட் விசா:
புதிய விசா, செப்டம்பர் 2022 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்வதற்காக வெளியிடப்படும், இது முந்தைய 30 நாட்களுக்குப் பதிலாக 60 நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கும்.
மல்டி எண்ட்ரீ டூரிஸ்ட் விசா
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சுற்றுலா நிறுவனங்களால் வழங்கப்படும் வழக்கமான டூரிஸ்ட் விசாவிற்கு கூடுதலாக, 5 வருட மல்டி எண்ட்ரீ டூரிஸ்ட் விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த எண்ட்ரீ பர்மிட் சுற்றுலாப் பயணிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸை இன்னும் ஆழமாக ஆராய அனுமதிக்கும். இந்த புதிய விசாவிற்கு ஸ்பான்சர் தேவைப்படாது. தேவை என்னவென்றால், விசா விண்ணப்பத்திற்கு 6 மாதங்களுக்கு முன் விண்ணப்பதாரர் $4,000 வங்கி இருப்பு வைத்திருக்க வேண்டும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மக்கள் தொடர்ந்து 90 நாட்கள் தங்கலாம் மற்றும் ஒரே நிபந்தனை என்னவென்றால், ஒரு வருடத்தில் தொடர்ந்து 180 நாட்களுக்கு மேல் தங்கக்கூடாது.
வேலை நுழைவு விசா (Job exploration entry visa)
இந்த விசாவிற்கு ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை. மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின்படி முதல் அல்லது 2வது அல்லது 3வது திறன் மட்டத்தில் வகைப்படுத்தப் பட்டவர்களுக்கும் உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் புதிய பட்டதாரிகளுக்கும் இது வழங்கப்படுகிறது மற்றும் குறைந்தபட்ச கல்வி தகுதி, இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமானதாக இருக்க வேண்டும்.
பிஸினஸ் எண்ட்ரீ விசா
இந்த நுழைவு அனுமதிக்கு, ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உறவினர்கள் அல்லது நண்பர்களைப் பார்ப்பதற்கான எண்ட்ரீ பர்மீட் விசா
தற்போதைய திருத்தத்தின்படி, ஒரு ஆணோ, பெண்ணோ ஐக்கிய அரபு எமிரேட் குடிமகன் அல்லது குடியிருப்பாளரின்’ உறவினர் அல்லது நண்பராக இருந்தால், இந்த நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை.
படிப்பு மற்றும் பயிற்சிக்கான எண்ட்ரீ பர்மீட்
இந்த பர்மீட்’ டிரெயினிங் மற்றும் படிப்புகளில் கலந்து கொள்பவர்கள் அல்லது இன்டர்ன்ஷிப் புரொகிராமில் பங்கேற்பவர்களுக்கானது. ஸ்பான்சர்’ நாடு அல்லது அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் உரிமம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களாக இருக்கலாம். படிப்பு அல்லது பயிற்சி அல்லது இன்டர்ன்ஷிப் திட்டத்தின் விவரங்களையும் அதன் காலத்தையும் தெளிவுபடுத்தும் நிறுவனத்திடமிருந்து கடிதம் தேவைப்படுகிறது.
தற்காலிக பணிக்கான எண்ட்ரீ பர்மீட்
இந்த அனுமதியானது, தகுதிகாண் சோதனை அல்லது புரொஜக்ட் அடிப்படையிலான பணி (probation testing or a project-based mission) போன்ற தற்காலிக பணி நியமனம் உள்ளவர்களுக்கானது. இந்த விசா முதலாளியால் ஸ்பான்சர் செய்யப்படுகிறது. இதற்கு வருகையின் நோக்கத்தை தெளிவுபடுத்துதல், வேலை செய்வதற்கான ஆரோக்கியம் மற்றும் தகுதிக்கான சான்று ஆகியவற்றை தெளிவுபடுத்தும் முதலாளியிடமிருந்து ஒரு கடிதம் தேவைப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.