பிறந்த தேதிக்கான ஆவணமாக ஆதார் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஏற்பு
ஆதாரில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதி தற்போது பிறந்த தேதிக்கான முறையான ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் இரண்டு தேதிகளில் உள்ள வேறுபாடு 3 வருடங்களுக்கும் குறைவானதாக இருக்க வேண்டும்.
ஆதாரில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதி தற்போது பிறந்த தேதிக்கான முறையான ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் இரண்டு தேதிகளில் உள்ள வேறுபாடு 3 வருடங்களுக்கும் குறைவானதாக இருக்க வேண்டும்.
ஓய்வூதிய நிதி அமைப்பான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) ஆன்லைனில் தனது சந்தாதாரர்களின் பிறந்த தேதி தவறுகளை திருத்திக் கொள்ள ஆதார் அட்டையை ஒரு முறையான ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும் என மத்திய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கோவிட் -19 தொற்று காரணமாக ஆன்லைன் சேவைகளின் கிடைக்கும் தன்மை மற்றும் அணுகலை விரிவாக்குவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் திருத்தப்பட்ட வழிமுறைகளை தனது கள அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளது. அதில், தனது பிஎப் உறுப்பினர்கள் தங்கள் பிறந்த தேதியை இபிஎப்ஓ ஆவணங்களில் சரிசெய்துக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.
Advertisment
Advertisements
திருத்தும் நோக்கத்திர்க்காக, ஆதாரில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதி தற்போது பிறந்த தேதிக்கான முறையான ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் இரண்டு தேதிகளில் உள்ள வேறுபாடு 3 வருடங்களுக்கும் குறைவானதாக இருக்க வேண்டும்.
பிஎப் சந்தாதாரர்கள் தங்களது திருத்த கோரிக்கையை ஆன்லைன் மூலமாக சமர்பிக்கலாம்.
இதன்மூலம் இபிஎப்ஓ தனது உறுப்பினர்களின் பிறந்த தேதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் உடனடியாக ஆன்லைன் மூலம் சரிப்பார்க்க முடியும். இதன் மூலம் மாற்றம் செய்வதற்கான கோரிக்கை செயலாக்க நேரத்தை குறைப்பதுடன் அங்கீகரிக்கவும் செய்கிறது.
ஆன்லைன் கோரிக்கைகளை உடனடியாக முடிக்க கள அலுவலகங்களுக்கு இபிஎப்ஓ அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் கோவிட் -19 தொற்றால் நிதி நெருக்கடியில் உள்ள பிஎப் உறுப்பினர்கள் தங்கள் பிஎப் கணக்கிலிருந்து non-refundable advance தொகையை எடுப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணபிப்பர்.
கோவிட் -19 ஊரடங்கு காரணமாக, இபிஎப்ஓ தனது சந்தாதாரர்கள் மூன்று மாத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியை non-refundable advance ஆக எடுக்கலாம் என்று முன்னர் கூறியிருந்தது.
ஆனால் இந்த வசதி KYC (Know You Customer) விவரங்கள் கொடுத்துள்ள உறுப்பினர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil