Advertisment

EPFO ஓய்வூதிய விண்ணப்பம்: ஃபார்ம் 10D-ஐ பூர்த்தி செய்வது எப்படி? விதிமுறைகள் என்ன?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்கள் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க ஃபார்ம் 10D-ஐ பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. EPFO இந்த 10D ஃபாரத்தை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
efpo Employees' Provident Fund Organisation, epf member login, pf office chennai, epfo login for employees

ஆன்லைனில் 10D படிவத்துடன் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?: 

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்கள் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க ஃபார்ம் 10D-ஐ பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. EPFO இந்த 10D ஃபாரத்தை வழங்குகிறது. 

Advertisment

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர், மனைவி, கணவர் பரிந்துரைக்கப்பட்ட நாமினி போன்ற விண்ணப்பதாரர் இந்த 10D ஃபாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 

மாதாந்திர ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க ஃபார்ம் 10D-யைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை பற்றிய விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

EPFO உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பின்னர் மாதாந்திர ஓய்வூதியம் பெற ஃபார்ம் 10D என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதில் தாமதம் ஏற்படாமல் இருக்க, தேவையான அனைத்து ஆவணங்களையும் துல்லியமாக சமர்ப்பிக்க வேண்டும். 

முதலில் ஃபார்ம் 10D-ஐ ஆன்லைனில் பயன்படுத்த, இ-நாமினேஷன் செய்திருப்பதையும், KYC செயல்முறை முடிக்கப்பட்டிருப்பதையும், சரியான தகவல்களைக் கொண்டிருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். 

அதற்கு பிறகு, நீங்கள் கிளைம் செய்ய இருக்கும் ஓய்வூதிய வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

ஓய்வூதியம் பெறுவதில் என்ன வகை இருக்கிறது? என்று உங்களுக்குத் தோன்றலாம். இது வயது மற்றும் பதவியில் இருப்பது போன்ற காரணிகளின் அடிப்படையில் மாறுபடும். 

பின்வரும் எந்த ஓய்வூதிய திட்டத்தை வேண்டுமானாலும் நீங்கள் க்ளைம் செய்ய முடியும்.  அதாவது, ஊனமுற்றோர் ஓய்வூதியம்,  குறைக்கப்பட்ட ஓய்வூதியம், கணவனை இழந்தவர்கள் மற்றும் குழந்தைகள் ஓய்வூதியம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஓய்வூதியம் ஆகிய வகைகள் உள்ளன.

ஊனமுற்றோர் ஓய்வூதியம் என்பது முழுமையான மற்றும் நிரந்தர ஊனம் காரணமாக பணியை விட்டு வெளியேறும் உறுப்பினருக்கானது. 

குறைக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது உறுப்பினர் 50 வயதிற்கு மேல், ஆனால் 58 வயதுக்கு குறைவாக இருந்து பணியை விட்டு வெளியேறிய பிறகு பெரும் ஓய்வூதியம் ஆகும். 

கணவனை இழந்தவர்கள் மற்றும் குழந்தைகள் ஓய்வூதியம் என்பது EPF உறுப்பினர் இறந்தவுடன் அவரின் குடும்பம் பெரும் ஓய்வூதியம் ஆகும். உதாரணமாக EPF உறுப்பினரின் மனைவி மற்றும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளாலாம். 

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஓய்வூதியம் என்பது EPF உறுப்பினர் அல்லது அவருடைய மனைவி இறந்த பிறகு அல்லது மறுமணம் செய்து கொண்ட அவர்களுடைய மகன் அல்லது மகள் பெறும் ஓய்வூதியம். 

EPF ஓய்வூதியத்தை யார் கிளைய்ம் செய்யலாம் என்றால், விண்ணப்பதாரர் இந்தத் துறையில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். 

உறுப்பினர் 

கணவரை இழந்தவர் 

மேஜர்/பெற்றோரை இழந்த குழந்தைகள் 

பாதுகாவலர் 

நாமினி 

படிவம் 10D உடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவை என்றால், அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பிறப்புச் சான்றிதழ், ஆதார், மனைவியின் 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை வங்கி கணக்குப் புத்தகத்துடன் சமர்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் 10D படிவத்துடன் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?: 

1. முதலில் www.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

2. அதன் பின் "Services" என்பதன் கீழ், "Employees" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. கீழே ஸ்க்ரோல் செய்து "Online service" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

4. UAN மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து உறுப்பினர் இ-சேவா போர்ட்டலில் உள்ளே நுழைய வேண்டும்.

5. "Online service" என்பதைக் கிளிக் செய்து, கொடுக்கப்பட்டிருக்கும் விருப்பங்களிலிருந்து படிவம் 10D-ஐக் கிளிக் செய்ய வேண்டும்.

6. உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். 

7. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கான பெட்டியைத் தேர்வு செய்ய வேண்டும்.

8. ஆன்லைன் கிளைம் செயல்முறைக்குச் செல்ல வேண்டும். 

9. குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் பிற விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.

10. உங்கள் பெயர் அச்சிடப்பட்ட பாஸ்புக்கை பதிவேற்ற "Choose file" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 

11. பதிவேற்றிய விவரங்களைச் சரிபார்த்து, "Get OTP" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

12. OTP-ஐ என்டர் செய்து படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Epfo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment