Employees' Provident Fund Organisation, PF, PF balance, check PF balance, PF passbook, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், பிஎப் பேலன்ஸ்,
Employees' Provident Fund Organisation: கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான சம்பளம் வாங்கும் தனிநபர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். பணியாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை சரிப்பார்த்துக் கொள்ளலாம். வருங்கால வைப்பு நிதி இருப்பை சரிப்பார்ப்பது என்பது இதுவரை ஒருவர் திரட்டியுள்ள ஓய்வூதிய சேமிப்பை குறித்த ஒரு திட்டத்துக்காகவும் தான்.
Advertisment
கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆன்லைன் சேவைகளுக்கு நன்றி. ஒருவர் வீட்டிலிருந்தப்படியே அவருடைய வருங்கால வைப்பு நிதி இருப்பை ஈபிஎப்ஓ (EPFO) இணையதளம் வாயிலாகவோ அல்லது ஆப்பை பதிவரக்கம் செய்தோ பார்த்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
ஈபிஎப் இருப்பை ஆன்லைன் மூலமாக சரிப்பார்க்க எளிய வழிகள்.
1. ஈபிஎப்ஓ போர்ட்டலை (portal) பயன்படுத்துவது
முதலில் Unified Member Portal லில் நீங்கள் பதிவு செய்துள்ளதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும். இப்போது உங்களுடைய Universal Account Number (UAN) மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற ஈபிஎப்ஓ இணையதளத்துக்குள் லாக் ஆன் செய்யவும். அதன்பிறகு ‘Our Services’ என்பதை சொடுக்கி ‘For employees’ என்பதை தேர்வு செய்யவும். ‘Services’ கீழேயுள்ள ‘Member Passbook’ என்பதை சொடுக்கவும்.
2. குறுஞ்செய்தி (SMS) மூலமாக பிஎப் இருப்பை தெரிந்துக் கொள்வது
கைபேசியிலுள்ள குறுஞ்செய்தி சேவை மூலமாகவும் நீங்கள் உங்கள் ஈபிஎப் இருப்பை தெரிந்துக் கொள்ளலாம். முக்கியமாக, உங்களுக்கு UAN நினைவில் இல்லை என்றால், குறுஞ்செய்தி அனுப்புவது ஈபிஎப் இருப்பு சரிபார்ப்பை அறிய உதவும்.
ஒருவர் தன்னுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினால் போதும். குறுஞ்செய்தி அனுப்பிய பிறகு உறுப்பினர் கடைசியாக பங்களிப்பு செய்த பிஎப் மற்றும் இருப்பு விவரங்களை பெறுவார்கள்.
3. மிஸ்ட் கால் மூலம் பிஎப் இருப்பு
உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்ட் கால் செய்தால் போதும். இரண்டு மணியோசைகளுக்கு பிறகு அழைப்பு துண்டிக்கப்படும். உடனடியாக உறுப்பினருக்கு குறுஞ்செய்தி மூலமாக இருப்பு விவரம் தெரிவிக்கப்படும். இந்த சேவை இலவசமாக அளிக்கப்படுகிறது மேலும் சாதாரண கைபேசிகளிலிருந்தும் (ஸ்மார்ட் கைபேசி அல்லாத) இந்த சேவையை பெறலாம்.
4.UMANG app மூலமாக பிஎப் இருப்பை சரிப்பார்ப்பது
UMANG app – Unified Mobile Application for New-age Governance என்ற ஆப்பை உங்கள் ஸ்மார்ட் கைபேசியில் பதிவிரக்கம் செய்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் பிஎப் இருப்பு, claim status, உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துக் கொள்ளுங்கள் (Know Your Customer KYC) நிலை ஆகியவற்றையும் தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil