EPFO Tamil News: PM Gareeb Kalyan Yojana திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்துள்ள தொகுப்பில் தனது சந்தாதாரர்களின் EPF மற்றும் EPS கணக்குகளில் வரவு வைக்க ஒரு புதிய மின்னணு வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த தொகுப்பு மார்ச் 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 100 தொழிலாளர்கள் வரை பணிபுரியும் ஒரு நிறுவனத்தில் 90 சதவிகிதம் தொழிலாளர்கள் ரூபாய் 15,000/- ஐ விட அதிகமக இல்லாமல் மாத சம்பளம் வாங்கும் பட்சத்தில், அந்நிறுவனங்களின் 24 சதவிகித பணியாளர்களின் சம்பளத்தை தனது பங்களிப்பாக மத்திய அரசு கொடுக்கும் என்று கூறியுள்ளது. இந்த பங்களிப்பை மூன்று மாதத்துக்கு அரசாங்கம் வழங்கும்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Electronic Challan-cum-return (ECR) ஐ தாக்கல் செய்வதன் மூலம் தகுதியான நிறுவனங்கள் இப்போது நிவாரணம் கோரலாம். முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் சார்பாக செலுத்த வேண்டிய தொகை மத்திய அரசால் மூன்று மாதங்களுக்கு பங்களிப்பு EPF உறுப்பினர்களின் UAN ல் வரவு வைக்கப்படும். உத்தேசமாக 79 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் தோராயமாக 3.8 லட்சம் நிறுவனங்கள் இந்த தொகுப்பின் மூலம் பயனடைவார்கள்.
Advertisment
Advertisements
EPFO Corona Relief: நிவாரணத்தை எப்படி பெறுவது
Electronic Challan-cum-Return (ECR) தாக்கல் செய்வதன் மூலம் நிறுவனங்கள் தங்களுடைய தகுதியான பணியாளர்களுக்கு நிவாரணத்தை பெற உதவும். எந்தவொரு தகுதியான ஸ்தாபனத்துடைய முதலாளி அனைத்து ஊழியர்களுக்கும் மாதஊதியத்தை வழங்கிவிட்டு Electronic Challan cum Return (ECR) ல் தேவையான சான்றிதழ்களுடனும் உறுதிஆவணத்துடனும் தாக்கல் செய்தால் திட்டத்தின் கீழ் பயனைப் பெறலாம்.
திட்டத்தின் விவரங்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் இந்த தொகுப்பின் பல்வேறு அம்சங்கள் பற்றிய விளக்கங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன இணையதளப் பக்கத்தில் COVID-19 என்ற தலைப்பின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil