பி.எஃப். நடைமுறை: வீட்டுக் கடனை செலுத்த இதைவிட சுலப வழி இல்லை

வீட்டுக்கடன் தொகையை திருப்பி செலுத்த வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி?

ppf account, saving schemes
வீட்டுக்கடன் தொகையை,வருங்கால வைப்பு நிதி, epf withdrawl rules

வீட்டுக்கடன் தொகையை திருப்பி செலுத்த வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி ?   

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் ஒரு தொழிலாளருக்கு தனது சம்பளத்தின் ஒரு பகுதியை பணி ஓய்வுக்கு சேமிக்கும் மிகவும் தேவையான ஒரு திட்டதை வழங்குகிறது. ஒரு தொழிலாளருடைய சம்பளத்தில் 12 சதவிகித அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைபடி ஆகியவற்றை சேர்த்து அவருடைய வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படுகிறது. வேலை அளிப்பவரும் அதற்கு சமமான ஒரு தொகையை செலுத்துவார். அதில் 8.33 சதவிகிதம் ஊழியரின் ஓய்வூதிய நிதிக்கு (Employee Pension Scheme EPS) செல்கிறது. மீதி தொகை வருங்கால வைப்புத் நிதி கணக்குக்கு செல்கிறது. வருங்கால வைப்பு நிதி கணக்கில் திரட்டப்படும் மொத்த தொகை தொழிலளியின் ஒய்வு பயன்பாட்டுக்கு. எனினும் ஒரு தொழிலாளி தனது வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருக்கும் பணத்தை சில பயன்பாடுகளுக்கு, (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் பட்டியலிட்டுள்ள காரணங்களுக்காக) எடுத்துக்கொள்ளலாம்.

வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள மொத்த தொகையில் 90 விழுக்காடு தொகையை கடன் திருப்பி செலுத்த எடுத்துக்கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் 1952 ல் உள்ள விதி 68BB ன் படி கடன் தொகையை திரும்ப செலுத்தவோ அல்லது கட்டிய வீடு அல்லது அடுக்குமாடி வீடு ஆகியவற்றை வாங்கவோ வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.

வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து கடன் தொகையை திரும்ப செலுத்த எவ்வாறு பணம் எடுப்பது.

இரண்டு நாட்களில் ஒருவரால் வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து கடன் தொகையை திரும்ப செலுத்த பணத்தை ஆன்லைன் (oniline) அல்லது ஆப்லைன் (offline) மூலம் எடுக்கலாம். ஆப் லைன் மூலம் எடுக்க அதற்குரிய விண்ணப்ப படிவத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன இணையதளத்திலிருந்து பதிவிரக்கம் செய்து பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து பணம் எடுக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன இணையதளத்துக்கு செல்ல வேண்டும். அதற்கு முன்பு அந்த ஊழியருடைய யுனிவர்சல் கணக்கு எண் (Universal Account Number UAN) செயல்பாட்டில் உள்ளதா என்றும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் இயங்குகிறதா என்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். UAN எண்ணை வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் (PAN) ஆகியவற்றுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து UAN portal க்கு சென்று உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அடுத்து Manage’ option ஐ சொடுக்கி KYC என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதிலிருந்து உங்களுடைய ஆதார், வங்கி கணக்கு மற்றும் பான் தகவல்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தகவல்கள் சரி பார்த்த பிறகு ‘Online Services’ என்பதை சொடுக்கி அதிலிருந்து (Form-31, 19 and 10C) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இவற்றை தேர்ந்தெடுத்த உடன், ஊழியரின் பெயர், தந்தையார் பெயர், பிறந்த தேதி, கைபேசி எண், ஆதார் எண், பான் எண், வங்கி கிளை பெயர் மற்றும் முகவரி, IFSC code மற்றும் ஊழியரின் பணி காலம் ஆகிய தகவல்கள் வரும். அடுத்து நீங்கள் உங்கள் வங்கி கணக்கின் இறுதி மூன்று எண்களை உள்ளீடு செய்ய வேண்டும். அடுத்து வரும் திரையில் ‘certificate of undertaking என்பது வரும் அதில் ஆம் (YES) என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து PF Advance’ form என்பதை சொடுக்கி, பணத்தை முன்கூட்டியே எடுப்பதறகான காரணத்தை கூற வேண்டும். அடுத்து நீங்கள் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Epfo withdrawal rules for home loan

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com