கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "கீரைக்கடை.காம்" கீரை வகைகளை புது வடிவில் ஆரோக்கியம் குறையாமல் சூப், பிஸ்கட்ஸ் போன்ற பல்வேறு வகை உணவுப் பொருட்களாக தயாரித்து மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பெயர் பெற்ற நிறுவனமாக உள்ளது.
இந்நிறுவனம் தனது புதிய தயாரிப்பான 'ஹெர்பல் டீ ட்விஸ்ட்' எனும் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்தது. இந்த புதிய தயாரிப்புகளை தன்னம்பிக்கை மேடை பேச்சாளர் மற்றும் சின்னத்திரை நட்சத்திரம் புகழ் 'ஈரோடு' மகேஷ் அறிமுகம் செய்து வைத்தார். இந்த புதிய தயாரிப்பு குறித்து கீரக்கடை.காமின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கீரைக்கடை.காம்" தனது தொடக்கத்தில் இருந்து கீரைகள் மற்றும் இயற்க்கை சார்ந்த தயாரிப்புகளுக்கான ஆரோக்கிய உணவு சந்தையில் முன்னணியில் உள்ளது, இன்றைய மக்களின் வேகமான வாழ்க்கை முறைக்கு ஏற்ப, ஆரோக்கியத்தில் சமரசம் செய்யாமல், அவர்களின் தேவைக்கேற்ப அதே சமயம் கீரையின் இயற்க்கை தன்மை மாறாமல் எந்த ஒரு வேதிப்பொருட்களும் சேர்க்காமல் கீரையினை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் கீரைக்கடையின் அர்ப்பணிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
/indian-express-tamil/media/post_attachments/9536a953-0c2.jpg)
இந்த வகையில் தற்போது புதிய மூன்று வகை டீ தூள்களை அறிமுகம் செய்துள்ளதாகவும், மூலிகை பூ டீ செம்பருத்தி, சாமந்தி பூ டீ, மற்றும் சங்கு பூ டீ, ஆகிய மூன்று புதிய டீத்துள்களை இன்று அறிமுகம் செய்துள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈரோடு மகேஷ் கூறியதாவது
/indian-express-tamil/media/post_attachments/206fc1ce-9a1.jpg)
இன்றைய கல்வி முறை மாணவர்களுக்கு ஒரு நல்ல வழி தடமாக அமைந்துள்ளது. தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க திட்டமாக உள்ளது என்றார். பொதுதேர்வு முடிவுகளை கண்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளுவது குறித்த கேள்விக்கு.தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தேர்வு முடிவுகள் ஒரு தீர்வாகாது. வாழ்க்கையை தீர்மானிப்பது உங்களது பொதுதேர்வு இல்லை என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
செய்தி : பி.ரஹ்மான், கோவை