தனது தாய்க்காக வெற்றியை சமர்பித்தவர்.. ஈரோடு மகேஷ் எமோஷனல் ஸ்டோரி!

காமெடியன், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடுவர், நடிகர் என அவரது குடும்பத்தினாரே ‘யாருடா மகேஷ்?’ என்று மறக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கிறார்,

erode mahesh wife vijay tv erode mahesh
erode mahesh wife vijay tv erode mahesh

erode mahesh wife vijay tv erode mahesh : ‘அசத்தப் போவது யாரு?’ நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமானவர் ஈரோடு மகேஷ். ‘அடை மொழி வச்சவன் யாரும் அழிஞ்சு போனதில்லை’ என்ற வடிவேலின் வசனத்திற்கு பக்கா சான்று நம்ம மகேஷ். ஸ்டாண்ட் அப் காமெடியன், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடுவர், நடிகர் என அவரது குடும்பத்தினாரே ‘யாருடா மகேஷ்?’ என்று மறக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கிறார்,

இன்று சின்னத்திரையில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் ஈரோடு மகேஷின் வெற்றிக்கு பின்னால் இருப்பது மூன்று பெண்களே…இவரது காதல் மனைவி ஸ்ரீதேவி முன்னாள் தொகுப்பாளினி ஆவார். மகேஷின் மிக பிசியான ஷெட்யூல்களை கவனித்து, அவரை ஒவ்வொருமுறையும் குறையில்லாமல் தயார் செய்யும் மிக முக்கிய பணியை தினமும் தவறாமல் செய்து வருகிறார்.

மகள் அமிழ்தா தான் மகேஷின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.மகேஷின் அம்மா மீனாட்சி தான் இங்கு மிக முக்கிய ரோல். மகேஷ் தொலைக்காட்சியிலோ, நேரடியாகவோ செய்யும் காமெடிகளைப் பார்ப்பவர்கள் புன்னகைக்கலாம்; சத்தமாகச் சிரிக்கலாம்; கைதட்டி ரசிக்கலாம். மகேஷின் அம்மாவோ, அவர் செய்யும் அந்த காமெடிக்கு மற்றவர்கள் எப்படிச் சிரிக்கிறார்கள் என்பதைப் பார்த்துதான், தானும் சிரித்துக்கொள்வார். காரணம், தன் மகனின் குரல் எப்படி இருக்கும் என்றே இவருக்குத் தெரியாது.

கருவுற்றிருந்தபோது, 28 வயதிலேயே, கேட்கும் திறனை இழந்தவர் மீனாட்சி. ஆனால், மனம் உடைந்து போய்விடவில்லை. தனக்கு ஏற்பட்ட குறையை ஒரு குறையாகவே கருதாமல், அடுத்தடுத்துப் பிறந்த இரண்டு மகன்களையும் அத்தனை அக்கறையோடு வளர்த்திருக்கிறார்.

இந்த உலகத்துல நம்முடைய அன்பை யார்கிட்ட வேணும்னாலும் காட்டிடலாம். ஆனா, எந்தத் தயக்கமும் இல்லாம நம்மோட கோபத்தைக் காட்ட ஓர் உறவு இருக்குன்னா, அது அம்மாதான். என்னோட அதிகபட்ச கோபங்களைத் தாங்கிய ஜீவன் என் அம்மாதான் என நெகிழ்ச்சியோடு கூறுகிறார் மகேஷ்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Erode mahesh wife vijay tv erode mahesh speech erode mahesh family kpy hotstar

Next Story
மட்டன் பிரியாணி சுவையில் சைவ பலாக்காய் பிரியாணிMutton Biriyani Veg Palakkai Biriyani Recipe Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com