சாலையோரங்களில் கிடைக்கும் எருக்க செடி இன் மருத்துவ பயன்கள் நிறைய உள்ளது. சளி இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் மூச்சு விடுதலில் ஏற்படும் சிரமங்களுக்கும் எருக்க செடியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
எருக்க செடியின் இலைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் போன்ற பிரச்சினைகள் மூச்சு விடுதலில் உள்ள சிரமம் போன்ற சுவாசக் கோளாறுகளை சரி செய்ய உதவும்.
செய்முறை: இந்த எருக்கசெடியின் இலைகள் மூச்சு விடுதல் உள்ள சிரமத்தை குறைக்க உதவும். அதற்கு ஒரு இலை எடுத்து நன்கு காயவைத்து பின்னர் அதன் ஓரமாக நெருப்பை பற்ற வைத்து இலை எரிந்து வரும் போது அதிலிருந்து வரும் புகையை மூக்கு துவாரங்கள் வழியாக சுவாசிக்க வேண்டும். அதனால் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும் நுரையீரல் சுவாச தொற்றுகளையும் சரிசெய்ய உதவும்.
இதில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நுரையீரலையும் வலுவடைய செய்யும். அதோட மட்டும் இன்றி உடலில் எங்காவது வீக்கம், கை, கால் வலி, மூட்டு வலி போன்ற வலிகளையும் குணமாக்க உதவும்.
Advertisment
Advertisements
படை, சொறி, சிரங்குகள் இருந்தால், இந்த எருக்க இலையின் சாறில், மஞ்சள் தூள் சேர்த்து, கடுகு எண்ணெய்யில் காய்ச்சி எடுத்து அந்த இடத்தில் தடவினால் விரைவில் குணமாகும். காலில் முள் குத்தினால் அந்த இடத்தில் எருக்கம் இலை பறித்து அந்த பாலை வைத்தால் போதும் உடனே குணமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.