பெடிக்யூர் செய்வதால் பாதங்கள் சுத்தமாவதுடன் பூஞ்சை தொற்று, ஆணிக் கால்கள் போன்றவை வராமல் தடுக்கும். மேலும், பெடிக்யூர் செய்யும் போது காலில் இரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் வலி, வீக்கம் ஆகியவை நீங்கும்.
இத்தகைய நன்மைகள் நிறைந்த பெடிக்யூரை நமது வீட்டில் இருந்தபடியே எளிமையாக செய்து கொள்ள முடியும். இதற்காக பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை எப்படி செய்வது என காணலாம்.
ஒரு ஸ்பூன் உப்பு, தலைக்கு தேய்த்து குளிக்க பயன்படுத்தும் ஷாம்பூ சிறிதளவு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் தேன் ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பசை பதத்திற்கு வரும் வரை கலக்க வேண்டும்.
இந்தக் கலவையை நம் காலில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர், கால்களை சாதாரண தண்ணீர் கொண்டு கழுவி விடலாம். இப்படி செய்வதன் மூலம் பார்லரில் மேற்கொள்ளப்படும் பெடிக்யூரை வீட்டிலேயே நம்மால் சாத்தியப்படுத்த முடியும். இதில் இரசாயன பொருள்கள் எதையும் சேர்க்காததால் ஒவ்வாமை ஏற்படும் அபாயமும் இல்லை.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.