/indian-express-tamil/media/media_files/2025/08/28/ethirneechal-gayathri-2025-08-28-09-35-22.jpg)
Ethirneechal Gayathri
இந்திய கலாச்சாரத்தின் அடையாளங்களில் முதன்மையானது புடவை. ஒரு திருமண நிகழ்வோ, கோவில் திருவிழாவோ, அல்லது ஒரு சிறிய குடும்ப நிகழ்ச்சியோ, புடவை அணியும் ஒரு பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பாள். குறிப்பாக, திருமணம் என்றாலே பட்டுப்புடவைதான் மையப்புள்ளி. பல மணிநேரம் மெனக்கெட்டு நெசவு செய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டு, மைசூர் பட்டு என ஒவ்வொன்றும் அதன் சிறப்பை பறைசாற்றும்.
பெண்கள் புடவை மீது கொண்டுள்ள காதல் ஒரு ஆழமான உணர்வு. இது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் ஒரு பழக்கம். பாட்டியின் பட்டுப்புடவை, அம்மாவின் திருமணப் புடவை என ஒவ்வொரு புடவையும் ஒரு பொக்கிஷம் போல பாதுகாக்கப்படும்.
அந்தவகையில் எதிர்நீச்சல் காயத்ரி தன்னிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புடவைகள் கலெக்ஷன் இருப்பதாக பெருமையுடன் கூறுகிறார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட புடவைகள்!
ஆமாங்க, என்கிட்ட கிட்டத்தட்ட ஒரு 1000 புடவைகளுக்கு மேல இருக்கும். இது ஒன்னும் பெரிய பெருமையா சொல்ற விஷயம் இல்ல, ஆனா என்னால ஒரு புடவையை ஒரு தடவைக்கு மேல மறுபடியும் போடவே முடியாது. ஒரு கல்யாணத்துக்கு நேத்து ஒரு புடவை கட்டிட்டு போயிருந்தேன்னா, திருப்பி அதை வேற ஒரு ஃபங்ஷனுக்கு கட்டவே யோசிப்பேன்.
ஏன்னு தெரியல, நேத்து ஒரு ஃபங்ஷனுக்காக அந்த புடவை, அதுக்கு மேட்ச்சா பிளவுஸ்னு எல்லாம் ரெடி பண்ணி, போட்டுட்டு போயிருப்போம். திருப்பி அதை எப்பவாவது போட்டா, 'அட, நீங்க இந்த புடவையை அந்த அயலி வெற்றி விழால போட்டீங்களே?'னு யாராவது கேட்டுட்டா, மனசுக்குள்ள ஒரு சின்ன வலி வரும். அதான், அந்த மாதிரி ரிப்பீட் பண்ணாம இருக்கப் பார்ப்பேன்.
வார்ட்ரோப்களுக்கு ஒரு தனி ரூம்!
ஆறு வார்ட்ரோப்களை ஃபுல்லா புடவையால நிறைச்சு வச்சிருக்கிறேன். இப்ப அந்த ஆறு வார்ட்ரோப்களுமே எனக்குப் பத்தல. அதனால எல்லாத்தையும் எடுத்துட்டு, புதுசா இன்பில்ட் வார்ட்ரோப்ஸ் ஸ்லைடிங் டோரோட புதுசா கட்டுறேன்.
அடுத்து, மொட்டை மாடிலயே புடவை வைக்கிறதுக்காக ஒரு ரூம் கட்டலாம்னு கூட யோசிச்சுட்டு இருக்கேன். நிஜமா சொல்றேன், இது நல்ல பழக்கம் இல்லைங்க. இவ்வளவு புடவை வச்சிருக்கிறது ஒரு நல்ல ஹாபிட் இல்லை. ஆனா என்ன பண்றது"னு தன்னோட ஸ்டைல் ரகசியத்தைச் சொல்கிறார் காயத்ரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.