அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சமையல் ஹேக்ஸ் இதோ!

தினசரி உங்கள் வேலையை எளிதாக்கும், மிகவும் பயனுள்ள சில சமையல் ஹேக்ஸ் இதோ!

cooking hacks
Everybody should know about these simple cooking hacks

தனியாக வாழும் இளம் மாணவர்கள் முதல் தங்கள் குடும்பத்திற்கு உணவளிக்கும் அம்மாக்கள் வரை, நம் அனைவருக்கும் சில சமையலறை திறன்கள் தேவை. அதிர்ஷ்டவசமாக, எவரும் தங்கள் சமையல் விளையாட்டை பெரிதும் மேம்படுத்த உதவக்கூடிய சில சிறிய தந்திரங்கள் இங்கே உள்ளன.

தினசரி உங்கள் வேலையை எளிதாக்கும், மிகவும் பயனுள்ள சில சமையல் ஹேக்ஸ் இதோ!

ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் ஐஸ்கிரீமை ஒரு பையில் வைக்கவும்

ஃபிரிட்ஜில் ஐஸ்கிரீம் கடினமாக இருக்கும், மேலும் நீங்கள் அதை உண்ணும் அளவுக்கு கரைவதற்கு பல நேரங்கள் ஆகும். அதை சரியான நிலைத்தன்மையுடன் வைத்திருக்க ஒரு எளிய தந்திரம், ஃப்ரீசரில் வைப்பதற்குமுன், கண்டெய்னரை, ஒரு பிளாஸ்டிக் ஜிப் லாக் பையில் வைக்க வேண்டும்.

வாழைப்பழத்தை உறைய வைக்கவும்

உறையவைத்த வாழைப்பழத்தை, பிசையும்போது ஒரு சரியான கிரீமி ஐஸ் கீரிம் பேஸ்-ஐ உருவாக்குகின்றன. ஒரு சூப்பர் ஆரோக்கியமான வீட்டில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமை உருவாக்க, இதை நீங்கள் மற்ற பழங்கள் மற்றும் பல்வேறு டாப்பிங்ஸுடன் கலக்கலாம்.

ஒரு பிளாஸ்டிக் பையில் பான்கேக் மாவை கலக்கவும்

ஒரு ஜிப் லாக் பை அல்லது பேஸ்ட்ரி பையை, பான்கேக் மாவை கலக்க பயன்படுத்தலாம். உங்களிடம் பேஸ்ட்ரி பேக் இல்லையென்றால், பிளாஸ்டிக் பையின் ஒரு மூலையில், சிறியதாக வெட்டி நீங்களே பேஸ்ட்ரி பை செய்யலாம். இதில் மாவை நிரப்பி, உங்களுக்கு பிடித்த வடிவத்தை உருவாக்கலாம்.

மெல்லிய நூலை பயன்படுத்தி மென்மையான உணவுகளை வெட்டுங்கள்

நீங்கள் ஒரு பெரிய கேக்கை வெட்ட, சிறிய கத்தியை மட்டும் வைத்திருந்தால், விஷயங்கள் குழப்பமாகிவிடும். ஆனால் சீஸ் மற்றும் சுவிஸ் ரோல்ஸ் போன்றவற்றைக் கூட துல்லியமாக வெட்டுவது கடினமாக இருக்கும். நீங்கள் விரைவாக மற்றும் துல்லியமாக வெட்டுவதற்கு மெல்லிய நூல்-ஐ பயன்படுத்தலாம்.

நீங்கள் ப்ரொடின் பவுடர், பாதாம் பால், ஓட்ஸ் பூ, வெவ்வேறு பழங்கள் மற்றும் பிற ஆரோக்கியமான பொருட்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் உணவுக்கு ஏற்ற ஸ்னாக் செய்யலாம்.

மைக்ரோவேவில் மூலிகைகளை உலர வைக்கவும்

நிரந்தர சேமிப்புக்கு, நீங்கள் சந்தையில் மொத்தமாக மூலிகைகளை வாங்கலாம் – பின்னர் அவற்றை மைக்ரோவேவில் உலர வைக்கவும். அவை முற்றிலும் வறண்டு போகும் வரை, அவற்றை 20 வினாடிகள் இடைவெளியில் வைக்கவும்.

 பேக்டு ட்ரீட்ஸ் உடன் ஆப்பிள் துண்டு

பேக்டு ட்ரீட்ஸ் (Baked treats) மிகவும் உலர்ந்ததாக இருக்கும் மற்றும் சிறிது நேரத்திற்குப் பிறகு அவ்வளவு சுவையாக இருக்காது. இதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த வழி, அவற்றை ஒரு ஆப்பிள் துண்டுடன் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைப்பது, இது ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், நீண்ட நேரம் சுவையாகவும் இருக்க உதவும்.

முட்டைகளை சில நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும்

வேகவைத்த முட்டைகள் சில சமயங்களில் உரிப்பது கடினம், ஆனால் அது புதிய முட்டைகள் மட்டுமே. ஒரு வாரம் பழமையான முட்டைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது, ஆனால் அவற்றை உரிக்க நம்பமுடியாத அளவிற்கு எளிதானது, எனவே நீங்கள் முன்கூட்டியே முட்டைகளை வாங்குவதை உறுதிசெய்து, அவற்றை கொதிக்கும் முன் சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் உட்கார வைக்கவும்.

முட்டைகளை உரிக்க கரண்டியைப் பயன்படுத்தலாம்

நீங்கள் இப்போது சில வேகவைத்த முட்டைகளை மட்டுமே சாப்பிட வேண்டும் மற்றும் உங்களிடம் புதியவை மட்டுமே இருந்தால், அவற்றை தண்ணீரில் சிறிது உப்பு சேர்க்கலாம். இப்போது ஒரு ஸ்பூனால்,  முனையை சிறிது சிறிதாக உடைத்து, உள்ளே இருந்து ஓட்டை உரிக்க ஆரம்பிக்கலாம். இது நம்பமுடியாத விரைவான மற்றும் எளிமையானது.

எலுமிச்சை துண்டுகளின் மேல் உங்கள் மீனை வறுக்கவும்

கிரில் மீது வைக்கப்படும் போது மீன் ஒட்டிக்கொண்டிருக்கும் மற்றும் உடைந்து போகும், ஆனால் நீங்கள் அதை எலுமிச்சை துண்டுகளின் மேல் வைத்து அதை கிரில் செய்தால், அதை தயாரிப்பது மிகவும் எளிதாக இருக்கும், மேலும் அது நல்ல சுவையான சுவையைப் பெறும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Everybody should know about these simple cooking hacks

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com