குறிப்பாக பண்டிகை மற்றும் திருமண காலங்களில் ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது, தலைமுடி உட்பட அழகின் பல அம்சங்களை புறக்கணிக்கிறோம்.
பலருக்கு பெரும் முயற்சி மற்றும் சோதனைகளுக்கு பிறகு சில ஹேர் ஸ்டைல்ஸ் நன்றாக பொருந்துகின்றன. ஆனால், அதன்பிறகு அவர்கள் புதிய ஹேர் ஸ்டைலை பரிசோதிக்கவோ அல்லது புதிதாக எதையும் முயற்சிக்கவோ விரும்புவதில்லை. ஆனால் இந்த ஒரே மாதிரியான தோற்றத்தை உடைக்க வேண்டிய நேரம் இது. உங்களுக்கு ஷோல்டர் அளவு நீள கூந்தல் இருந்தால், கரிஷ்மா யாதவ் பல்லா (@pinktrunkk), கண்டெண்ட் கிரீயேட்டர் சில ஸ்டைலான மற்றும் எளிதான ஃபார்மல் ஹேர் ஸ்டைல்ஸை பகிர்ந்து கொள்கிறார்.
"இந்த விரைவான மற்றும் நேர்த்தியான மீடியம் லென்த் (medium-length) ஹேர் ஸ்டைல்- வழக்கமான ஆஃபிஸ் லுக்-மீட்டிங்-ஃபார்மெல் கெதரிங்- என பல நிகழ்வுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
பாதி-மேல்-பாதி-கீழ் (Half-up-half-down)
நீங்கள் ஸ்டைலான வைப்ஸ் விரும்பினால் இந்த தேர்வு சரியானது. அடர்த்தியான அலை அலையான கூந்தலுடன், இது மிகவும் அற்புதமான தோற்றத்தை அளிக்கிறது. வழக்கமான ஆஃபிஸ் லுக்ஸ், அல்லது ஏதேனும் ஃபார்மல் கெதரிங்க்கு இந்த ஹேர்-ஸ்டைல் பொருத்தமான தேர்வு.
ஹை போனிடெய்ல் வித் ட்வீஸ்ட் (High ponytail with a twist)
போஹேமியன் கிளாசிக் ஸ்ட்ரைட் தோற்றத்தைப் பெற, ஒரு பக்கத்தில் பிரஞ்சு பின்னலைச் சேர்க்கவும். நிகழ்வுகளைப் பொறுத்து பின்னலின் அளவை மாற்றவும். இது பகல் மற்றும் இரவு என எப்போதும் எளிதாக அணிந்து கொள்ளலாம்.
லோ பன் (Low bun)
மீடியம் லென்த் ஹேர் பெரும்பாலும் பன் ஹேர் ஸ்டைல்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் உங்கள் கொண்டையை உயர்த்தி கட்டாமல், கீழே கட்டுவது உங்கள் தோற்றத்தில் அற்புதமாக வேலை செய்யும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“