Advertisment

கண்ணாடிய தூக்கி ஓரமா வையுங்க... கூர்மையான பார்வைக்கு டெய்லி இத மட்டும் பண்ணுங்க!

கூர்மையான கண் பார்வைக்கு நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் இருக்கின்றன. அவை என்னவென்று தற்போது பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Eyes

உடல் ஆரோக்கியம் என்பது கண்களையும் சேர்த்தது தான். அப்படி, கண்களை பராமரிப்பதற்காகவே சில பிரத்தியேக வழிமுறைகள் இருக்கின்றன.

Advertisment

வாரத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய்யை மெலிதாக சூடுபடுத்த வேண்டும். அதன் பின்னர், இதனை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனால், உடல் சூடு தணியும். உடல் சூடு தணிதல் என்பது கண்கள் ஆரோக்கியத்தில் முக்கியமான காரியம்.

காலை எழுந்த உடன் செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். எழுந்ததும் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இப்படி செய்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி கிடைக்கும். இதை தினசரி பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இவை நம் கண்களுக்கு நல்லது.

கண்களுக்கு தினசரி சில பயிற்சிகளை கொடுக்க வேண்டும். கண்களை நன்றாக மேலும், கீழுமாக அசைக்க வேண்டும். பார்ப்பதற்கு எளிதாக இருக்கும் இந்த பயிற்சி கண் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை எப்போதும் வேண்டுமானாலும் செய்யலாம்.

Advertisment
Advertisement

இதைத் தொடர்ந்து, நம் மோதிர விரல்களை கொண்டு புருவங்களுக்கு மேல் இருந்து கீழ்ப்புறமாக மெலிதாக மசாஜ் செய்வதை போல் தேய்க்க வேண்டும். தினசரி இரவு தூங்குவதற்கு முன்பு, இவ்வாறு 4 அல்லது 5 முறை செய்யலாம். இதேலோல், கண்களுக்கு கீழ்ப்பகுதியிலும் செய்ய வேண்டும். இவை கண்களுக்கு தேவையான சீரான இரத்த ஓட்டத்தை வழங்குகிறது.

வீட்டில் இருக்கும் ஒரு அறையில் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, ஒரு மெழுகுவர்த்தியை மட்டும் ஏற்றி வைக்க வேண்டும். மெழுகுவர்த்தியில் இருந்து சுமார் 5 அடி தூரம் தொலைவில் அமர்ந்து, அதன் ஒளியை மட்டுமே பார்க்க வேண்டும். இப்படி நம் கண்களில் இருந்து நீர் வரும் வரை இமைக்காமல் பார்க்க வேண்டும். இதன் மூலம் கண்களில் தூசி அல்லது அழுக்கு இருந்தால் அவை வெளியேறி விடும். 

20 - 20 - 20 ரூலை பின்பற்றுவதன் மூலம் கண் ஆரோக்கியத்தை எளிமையாக பராமரிக்க முடியும். அதாவது, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, சுமார் 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை, 20 வினாடிகள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இது கண்கள் வறண்டு போவதை தடுக்க உதவும். 

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Everyday tips to protect your eyesight
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment