40 வயசுலயும் இளமையா சுறுசுறுப்பா இருக்க இந்த 3 விஷயங்களை பண்ணுங்க: கிறிஸ்டியானோ ரொனால்டோ ரகசியம்
இப்போது நீங்கள், "ரொனால்டோவைப் போல் பயிற்சி செய்ய எனக்கு நேரம் இல்லை" என்று கூறலாம். கவலை வேண்டாம்! உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை இங்கே பார்ப்போம்.
இப்போது நீங்கள், "ரொனால்டோவைப் போல் பயிற்சி செய்ய எனக்கு நேரம் இல்லை" என்று கூறலாம். கவலை வேண்டாம்! உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை இங்கே பார்ப்போம்.
உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் வயதை குறைக்கும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இதற்கு ஆதாரம் கேட்பவர்களுக்கு, இதோ ஒரு உதாரணம். கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் வெய்ன் ரூனி ஆகிய இருவரையும் பாருங்கள். இவர்களில் யார் இளமையாகத் தெரிகிறார்கள்? இந்தக் கேள்விக்கு சந்தேகமில்லாமல் ரொனால்டோ என்று தான் பதிலளிப்பீர்கள்.
ஒரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், வெய்ன் ரூனி ரொனால்டோவை விட ஒரு வயது இளையவர். இதுதான் உடற்பயிற்சி, வெயிட் டிரெய்னிங் மற்றும் தசைகளை உருவாக்குவதன் சக்தி.
இதை கேட்டதும், உங்களுக்கு ரொனால்டோவைப் போன்று தினமும் உடற்பயிற்சி செய்யவோ, பயிற்சி எடுக்கவோ நேரம் இல்லை என நீங்கள் கூறலாம். அப்படிப்பட்டவர்களுக்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Advertisment
Advertisements
சரியான தூக்கம்: தினமும் 7 முதல் 9 மணி நேரம் தங்கு தடையற்ற உறக்கத்தை மேற்கொள்ளுங்கள். இது செல்கள் புத்துயிர் பெற உதவும்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகள்: மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளான யோகா, தியானம் அல்லது மூச்சுப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் முறையற்ற தூக்கம், செல்கள் வேகமாக வயதாவதற்கு வழி வகுக்கும்.
வழக்கமான உடற்பயிற்சி: குறிப்பாக, வலுப் பயிற்சி (Strength Training) செய்வது, உடல் வயதைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழி. இது தசை வலிமையை அதிகரிப்பதுடன், வளர்சிதை மாற்றத்தையும், எலும்புகளின் அடர்த்தியையும் மேம்படுத்தும். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது கூட, உங்கள் உடலின் உயிரியல் கடிகாரத்தில் அதிசயங்களை நிகழ்த்தும்.
ஆகவே, தினமும் சிறிது நேரம் ஒதுக்கி, இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி இளமையாக இருங்கள்.