Exercise won’t make you lose weight: Here’s all you need to know – உடற்பயிற்சியினால் மட்டும் உடல் எடை குறையாது – ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் ஆராய்ச்சியாளர்
உடற்பயிற்சி செய்தால் போதும், உடல் உடை குறைந்து விடும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காக தான் இந்த சிறிய தகவல். நீரிழிவு, செரிமானம் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் அலெக்ஸாய் கிராவிட்ஸ், மூன்று விதமான காரணிகள் கொண்டே உடல் எடையை குறைக்க முடியும் என்கிறார்.
வளர்சிதை மாற்ற விகிதம், டயட், மற்றும் உடற்பயிற்சி என்று மூன்று நிலைகளை முன்னிறுத்துகிறார். கிராவிட்ஸ் ஆய்வை பொறுத்தவரை, வளர்சிதை மாற்ற விகிதம் மூலம் 60 – 80 சதவிகித கலோரிகளை எரிக்க முடியும் என்று கூறுகிறார்.
உடற்பயிற்சி மூலம் 10-30 சதவிகித கலோரிகளே எரிக்கப்படுகிறதாம். டயட் மூலம் 10 சதவிகித கலோரிகளை எரிக்க முடியும் என்கிறார்.
இங்கு உடற்பயிற்சி என்பது குனிந்து நிமிர்வது மட்டுமல்ல….. நடப்பது, டைப் செய்வது, மற்ற வீட்டு வேலைகளை செய்தல், வழக்கமான உடற்பயிற்சி என்று இவையனைத்தையும் செய்தால் கூட 10-30 சதவிகித கலோரிகளை மட்டுமே எரிக்க முடியும் என்கிறார்.
சிலர் உடற்பயிற்சி செய்துவிட்டு, மாங்கு மாங்கு வென்று பல அயிட்டங்களை வயிற்றுக்குள் தள்ளுவார்கள். இதனால், ஒரு பயனும் இல்லை என்கிறார் கிராவிட்ஸ். நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டே வாக்கிங் சென்றுவிட்டு, மூன்று வடைகளை அமுக்குவார்கள். கேட்டால், தினமும் வாக்கிங் செல்கிறேன் என்பார்கள். அவர்களுக்கு எந்த ஜென்மத்திலும் உடல் எடை குறையாதாம்.
ஒருவர் 30 நிமிடங்கள் வேர்க்க விறுவிறுக்க வாக்கிங் சென்றுவிட்டு, அரை பீஸ் கேக் சாப்பிட்டாலே, அந்த 30 நிமிட வாக்கிங்கும் வேஸ்ட் என்கிறார் கிராவிட்ஸ்.
ஸோ, ஒழுங்கான டயட், உடற்பயிற்சி ஆகியவை மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று தனது ஆய்வில் கிராவிட்ஸ் குறிப்பிடுகிறார்.