புதுவித கண்காட்சி: உடைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்ணை நோக்கியே பல கேள்விகள் எறியப்படுகின்றனர். அதில் முதலாவது கேள்வி, “அவள் என்ன உடை அணிந்திருந்தாள்?”, என்பது.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்ணை நோக்கியே பல கேள்விகள் எறியப்படுகின்றனர். அதில் முதலாவது கேள்வி, “அவள் என்ன உடை அணிந்திருந்தாள்?”, என்பது.

ஆனால், அணிந்திருக்கும் உடைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில், ப்ரஸ்ஸல்ஸ் நகரில் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

“இது என்னுடைய தவறா?”, என்ற பெயரில் நடத்தப்பட்ட அந்த கண்காட்சியில் ட்ராக்சூட்ஸ், பைஜாமா உள்ளிட்ட ஆடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான லீஷ்பெத் கென்ஸ் என்பவர் கூறுகையில், “இங்கு நீங்கள் நடக்கும்போது நீங்கள் உடனடியாக எதனை பார்க்கிறீர்கள்? எல்லோரும் அணியக்கூடிய சாதாரணமான உடைகள்தான் இவை.”,ம் என கூறினார்.

“ஒவ்வொரு பெண்ணும் அவர்கள் விரும்பக்கூடிய உடைகளை அணியலாம் என்பதை மக்கள் உணர வேண்டும் என நாங்கள் நினைத்தோம். அணியும் உடைகளுக்காக எந்தவொரு பெண்ணும் தாக்கப்படக் கூடாது. இந்த கண்காட்சி அதற்காகத்தான். எந்தவொரு உடையும் பாலியல் வன்புணர்விலிருந்து பாதுகாக்காது”, என நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த டெல்ஃபின் என்பவர் தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close